Saturday, March 17, 2018

சல்வேடர் டாலி - Part 2

சல்வேடர் டாலி 84 வயது வரை வாழ்ந்த ஸ்பெயின் ஓவியர். இவரது ஓவியங்கள் இயற்கை காட்சிகளாகவும் அதே சமயம் சர்ரியலிச வகை தொகுப்புகளும் உலக புகழ் பெற்றவை.

விலங்குகள் இயற்கை ஓவியத்தில் தீட்டுவதை இவர் வித்தியாசமாக சர்ரியலிச வகைப் பட்டியலில் சேர்த்தார்.

சிறியவர் முதல் பெரியவர் வரை என்றும் பிரமித்து பார்த்து ரசிக்கும் விலங்கு யானை, இவரது ஓவியங்களில் ஒட்டகசிவிங்கி கால்களுடன் வித்தியாசமாக அணி வகுக்கும்.

ஓவியங்கள் பல இருப்பினும் யானைகள் பவனி வந்த 3 ஓவியங்களை உதாரணம் காட்டலாம் ஓவிய தலைப்புகள்

1. Les Elephants painting


2. Swans Reflecting Elephants


3. Dreams Caused by the Flight of a Bee around a Pomegranate


கிரேக்க மற்றும் எகிப்திய கட்டிட சிறப்புமிக்க நினைவுத்தூண்கள் அதன் உச்சியிலே ஒரு பிரமிட் இதை ஆங்கிலத்தில் அபிலிஸ்க் என்பர்.
முதுகில் இந்த தூண்கள் சுமந்து செல்லும்
குச்சி கால் யானைகள் "டாலியானைகள்" என்றே சிறப்பு பெற்றன. அரசனின் கோலோச்சிய பெருமை பேசும் தூண்கள் அந்த நாட்டின் பெருமை பேசினாலும் அதன் பின்னால் நசுக்கப் பட்ட, வஞ்சிக்கப் பட்ட ஏழை மக்களின் வாழ்வியலும் சேர்ந்தே இருப்பதை பட்ட வர்தனமாக சொல்கின்றன.

அன்னப் பறவையின் நீண்ட நிழல்கள் கஜமுகன்களாக தோற்றமளிக்கின்றன. அழகின் பின்னே மறைந்திருக்கும் கொடூர நிகழ்வுகளோ? பொய்கள் தோரணம் சூட்டி அழகில் மறைந்தாலும்

உண்மைகள் ஒரு நாள் வெளிவந்து எக்கால சிரிப்பு காட்டும் உலக நியதி.
கடைசியாக சொன்ன ஓவியம் டாலி தன் மனைவியை(காலா) கனவில் கண்ட காட்சியாக பிரதிபளிக்கிறது. நிர்வாணமாக இருக்கும் அவளை கொடூர புலிகள் துரத்த அந்த விலங்கினை விழுங்க முயற்சிக்கும்
மாதுளையில் முத்துக்களில் தோன்றிய
சுறாக்கள் பின்னணியில் கடலின் மேல் ஓடிவரும் கால் நீண்ட வெள்ளை யானை.

பெண்,துப்பாக்கி,புலி கீழே மாதுளையை சூழும் வண்டு இவைகள் சொல்லும் கருத்து? பெண் என்பவள் காமபசி புலிகளால் துரத்தப் படுபவள் ஏன்?. பூக்களை தேடி ஓடும் வண்டுகள் கனிகளை தேடி ஓடினால் ? அதிகார வர்கம் செய்யும் அட்டகாசங்களை இவ்வுலகம் பனியில் உறைந்த வெள்ளையானை போல பார்த்துக் கொண்டிருப்பதா ஜன நாயகம் ?

No comments:

Post a Comment

Popular Posts