Saturday, December 28, 2013

கனவு ஓவியர் டான் வோய்னா

ரூமேனியாவை சேர்ந்த ஓவியர்  டான் வோய்னா  DAN VOINEA
இவர் வரையும் ஓவியங்கள் madness and fantasy  என்ற வடிவங்களின் கீழ் வருகிறது.  கனவுலகில் சஞ்சரிகாதவர்கள் யாருமில்லை என சொல்லலாம். ஏதேனும் ஒரு சந்தர்பங்களில் நாம் அந்த உலகிற்குள் செல்கிறோம்.  இதை தனது ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். தற்போது இவர் பெர்லினில் வசித்து வருகிறார் (Berlin, Germany)

DAN VOINEA (b. 1970, Brasov, Romania)


                                                      (Oil on linen )



                                     "உன் நினைவுகளை சுமந்து நான் எப்போதும்...."


                               "அவளின் அன்பின் பின்னே நான் எப்போதும்.."

"உன் நினைவுகளில் என் முகமே எனக்கு மறந்து போய்விட்டது"

                                                      கனவுகளில் என் தேடல்...

என் நினைவுகளை சிதறடித்து 
வலைவீசி காத்திருக்கிறேன்...
அவனுக்காக ... 











"ஓவியர் "

Thursday, December 19, 2013

பெயர் தெரியா ஓவியர்களின் ஓவியங்கள்!


இப்பதிவில் சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு... இந்த ஓவியங்களை தீட்டியவர்கள் யார்  யார் என தெரியவில்லை.  மேற்குலக ஓவியமா, ஆசிய ஓவியமா, அரேபிய ஓவியமா? .  எப்படி இருப்பினும் ஒவ்வொரு ஓவியமும் நம்மோடு கதை பேசுகிறது. அந்த கால கட்டத்திற்கு நம்மை இழுத்து செல்கிறது.   ஓவியங்களுக்கு அவர்கள் செலவிட்ட மணித்துளிகளும் சிரத்தையும் இன்று பார்க்கும் போதும் நம்மை  அசர வைக்கிறது.

















நன்றி
கலாகுமரன்

Friday, October 25, 2013

நிழல்கள்...


சில புதிய ஓவியங்களை இந்த பதிவில் பகிர்கிறேன்.



மேலே உள்ளது பெல்காமை சேர்ந்த ஓவியர் ஷிரிஸ் தேஷ்பாண்டேவின் ஓவியம் இந்த ஓவியத்தில் டெல்லியின் பழைய தெரு வரையப்பட்டு உள்ளது இதில் வெயில் மற்றும் நிழல் அருமையாக காட்டப் பட்டுள்ளது. ( சைக்கிள் , சைக்கிள் ரிக்ஸா, மின் கம்பி).  

கீழே உள்ளது அவரின் இன்னொரு ஓவியம் 



சீன ஓவியர் ஷீ தோ வின் ஓவியம் மேலே உள்ளது. இது வாட்டர் கலரில் வரையப் பட்டது. வயதின் சுருக்கங்கள் , தலை மீது இருக்கும்  மூங்கில் தொப்பியில் இருந்து விழும் நிழல் தத்ரூபமாக இருக்கிறது.  ஓவியரை பற்றிய குறிப்புகள் தெரியவில்லை.



இது பிரேஸில் ஓவியர் அந்தேரி மராணி வரைந்த ஓவியம்.  இதற்கு " காஃபியின் வாழ்க்கை " என தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.  வயதான பெண்மணி காபி தோட்டத்தில் வேலை செய்கிறார். இது அவரின் வாழ்க்கையும் ஆகும் என்பதே இதன் பொருள். காகிதத்தில் பென்சிலால் வரையப்பட்ட இந்த ஓவியம் ஒரு புகைப்படம் போல தெரிகிறது ஓவியரின் உழைப்பு இதில் தெரிகிறது. இது உங்களையும் கவரும் என நினைக்கிறேன்.



அதே போல கருப்பு வெள்ளையின் அழகை வெளிப்படுத்தும் ஓவியம் இது.  தாரகையின் கண்கள் பார்பவரை நிச்சயம் கவரக் கூடியது.


ஓவியரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை.  தூரிகையின் வீச்சை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  நாட்டிய மங்கையின் நளினம் நம் மனதை கவர்கிறது.


artist Sir John Everett Millais 1829-1896

ஓவியர் சர் ஜான் எவரெட் மெலே,   அருமையான இவரின் ஓவியங்கள் கிடைத்தால் தகவல்களுடன் பகிர்கிறேன்.


Thursday, October 24, 2013

இந்திய கார்ட்டூன் மேதை ஆர்.கே.எல்

ஆர்.கே.லக்ஷ்மன் எனும் கார்ட்டூன் மேதையின் பிறந்தநாள்  (24 அக்டோபர் ). இவரின் சகோதரர் தான் பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயன். முதலில் 'தி ஹிந்து'வில் வரைந்த இவர் பின் 'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் அறுபதாண்டு காலமாக 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இவர் அடித்த எள்ளல்கள் அபாரம்.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் ஒரு அஞ்சல் தலையே அந்த 'காமன்மேன்' நினைவாக வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயனின் 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சி தொடருக்கு இவரே ஓவியம் வரைந்தார்.

எளிய ஆனால் ஆழ்ந்த சமூகப்பார்வைக்கு நல்ல எடுத்துகாட்டு இவரின் கார்டூன்கள். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் முத்திரையும் இவர் வரைந்ததே! இவரை ஒட்டி ஒரு நகைச்சுவை தொடரே ஹிந்தியில் வந்தது .

இவரின் கார்ட்டூன்கள் நூல்களாக வந்து நல்ல விற்பனை ஆயின. தற்பொழுது தொன்னூறு வயதை தாண்டி விட்ட அவர் சில வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்து சீர்பெற்று அவ்வளவாக பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

அவரின் தூரிகை தெளித்த வெளிச்சத்தில் எத்தனையோ பேர் இப்பொழுது மின்னுகிறார்கள். இப்பொழுதும் அவர் உருவாக்கிய ’காமன்மேன்‘ சிலை நிற்கிறது மும்பையில்.

அவரின் தைரியம் பலரால் சுவீகரிக்க பட்டு இருக்கிறது.அதுதானே வெற்றி !

நன்றி : தி ஹிந்து


























Popular Posts