Friday, October 25, 2013

நிழல்கள்...


சில புதிய ஓவியங்களை இந்த பதிவில் பகிர்கிறேன்.மேலே உள்ளது பெல்காமை சேர்ந்த ஓவியர் ஷிரிஸ் தேஷ்பாண்டேவின் ஓவியம் இந்த ஓவியத்தில் டெல்லியின் பழைய தெரு வரையப்பட்டு உள்ளது இதில் வெயில் மற்றும் நிழல் அருமையாக காட்டப் பட்டுள்ளது. ( சைக்கிள் , சைக்கிள் ரிக்ஸா, மின் கம்பி).  

கீழே உள்ளது அவரின் இன்னொரு ஓவியம் சீன ஓவியர் ஷீ தோ வின் ஓவியம் மேலே உள்ளது. இது வாட்டர் கலரில் வரையப் பட்டது. வயதின் சுருக்கங்கள் , தலை மீது இருக்கும்  மூங்கில் தொப்பியில் இருந்து விழும் நிழல் தத்ரூபமாக இருக்கிறது.  ஓவியரை பற்றிய குறிப்புகள் தெரியவில்லை.இது பிரேஸில் ஓவியர் அந்தேரி மராணி வரைந்த ஓவியம்.  இதற்கு " காஃபியின் வாழ்க்கை " என தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.  வயதான பெண்மணி காபி தோட்டத்தில் வேலை செய்கிறார். இது அவரின் வாழ்க்கையும் ஆகும் என்பதே இதன் பொருள். காகிதத்தில் பென்சிலால் வரையப்பட்ட இந்த ஓவியம் ஒரு புகைப்படம் போல தெரிகிறது ஓவியரின் உழைப்பு இதில் தெரிகிறது. இது உங்களையும் கவரும் என நினைக்கிறேன்.அதே போல கருப்பு வெள்ளையின் அழகை வெளிப்படுத்தும் ஓவியம் இது.  தாரகையின் கண்கள் பார்பவரை நிச்சயம் கவரக் கூடியது.


ஓவியரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை.  தூரிகையின் வீச்சை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  நாட்டிய மங்கையின் நளினம் நம் மனதை கவர்கிறது.


artist Sir John Everett Millais 1829-1896

ஓவியர் சர் ஜான் எவரெட் மெலே,   அருமையான இவரின் ஓவியங்கள் கிடைத்தால் தகவல்களுடன் பகிர்கிறேன்.


Thursday, October 24, 2013

இந்திய கார்ட்டூன் மேதை ஆர்.கே.எல்

ஆர்.கே.லக்ஷ்மன் எனும் கார்ட்டூன் மேதையின் பிறந்தநாள்  (24 அக்டோபர் ). இவரின் சகோதரர் தான் பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயன். முதலில் 'தி ஹிந்து'வில் வரைந்த இவர் பின் 'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் அறுபதாண்டு காலமாக 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இவர் அடித்த எள்ளல்கள் அபாரம்.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் ஒரு அஞ்சல் தலையே அந்த 'காமன்மேன்' நினைவாக வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயனின் 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சி தொடருக்கு இவரே ஓவியம் வரைந்தார்.

எளிய ஆனால் ஆழ்ந்த சமூகப்பார்வைக்கு நல்ல எடுத்துகாட்டு இவரின் கார்டூன்கள். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் முத்திரையும் இவர் வரைந்ததே! இவரை ஒட்டி ஒரு நகைச்சுவை தொடரே ஹிந்தியில் வந்தது .

இவரின் கார்ட்டூன்கள் நூல்களாக வந்து நல்ல விற்பனை ஆயின. தற்பொழுது தொன்னூறு வயதை தாண்டி விட்ட அவர் சில வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்து சீர்பெற்று அவ்வளவாக பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

அவரின் தூரிகை தெளித்த வெளிச்சத்தில் எத்தனையோ பேர் இப்பொழுது மின்னுகிறார்கள். இப்பொழுதும் அவர் உருவாக்கிய ’காமன்மேன்‘ சிலை நிற்கிறது மும்பையில்.

அவரின் தைரியம் பலரால் சுவீகரிக்க பட்டு இருக்கிறது.அதுதானே வெற்றி !

நன்றி : தி ஹிந்து


Saturday, October 19, 2013

நவீன ஓவியங்கள்

இந்த பதிவில் நீங்கள் காணும் ஓவியங்கள் பல்வேறு பகுதியை சேர்ந்தவ ஓவியர்கள் வரைந்தது. ஜெர்மனி, ஆப்ரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ், எகிப்து,ஸ்பெயின்.. இப்படி.   தூரிகையின் வீச்சு ஒவ்வொன்றும் ஒவ்வொரு புரிதலை நமக்குள் ஏற்படுத்துகிறது. 


ஒரு பீடத்தில் முதியவரும் ஒரு பீடத்தில் குழந்தையும்
ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக வரையப்பட்டது.  மனித வாழ்க்கை நீண்டது ஆனால் வேகமாக செல்கிறது.  முதியவரின் எண்ணப் பிரதி பளிப்பாக இந்த ஓவியம்.
 

Drawing where I want to represent the 'Man' reflecting on his own life, "" life is long .. but it goes so fast "," two figures comprise an elderly man sitting in a 'humble pedestal' and at the bottom left a child with their first days of life on another pedestal .. man looks at him and thinks .......  muerta  (spain)இது ஒரு சுவர் ஓவியம், ஓவியர் ஹோஸ்னி, எகிப்து.மேலே உள்ள புதுமைப்பெண் மரப்பலகையில் தீட்டப்பெற்றது.  பெண் ஓவியர் மார்ஸி ஈபென்.

அவரின் இன்னொரு ஓவியம் கீழே


கொக்குகளின் நாட்டியம்


Popular Posts