Monday, June 25, 2012

[ Findings ] பிகாசோ ஓவியமும், பாவனைகளும்...


பிகாசோ ஓவியம் : தலைப்பு : ஓவியரும் மாடலும் : ஆண்டு :1926 
வகை ஆயில் பெயின்ட் : தளம் : கேன்வாஸ் மார்டன் ஆர்ட் 


இந்த வகை ஓவியத்தில் பார்பவரின் மனதில் ஏற்படும் பிம்பங்கள் உருவங்கள் வரைந்த ஓவியரின் மனதிலும் இருக்குமென கூற முடியாது.  அவர் அவர் கண்ணோட்டத்திற்கேப்ப மாறிக்கொண்டே இருக்கும்.  மேலும் ஒரு நாள் நீங்கள் யோசித்தது மறுநாள் பார்த்தால் மாறி இருக்கும். ஏனென்றால் அவர் வரையும் போதே மேன் மேலும் உருவங்களை கோடுகளாக்கி வரைந்துள்ளார்.  மேலும் நிறங்கள் நிழல்கள் நம் சிந்தனையை உருமாற்றிக்கொண்டே இருக்கும்.  இந்த ஓவியத்திற்கு தலைப்பு " ஓவியரும் மாடலும் " என்பதால் அது சம்பந்தப்பட்ட என்ன ஓட்டத்திற்கேற்ப உங்களுக்கு பிம்பங்கள் தோன்றும்.பிகாசோ ஓவியம் : தலைப்பு : (லயிப்பு )அசைவற்ற நிலைப்பாடு : ஆண்டு :1925 
வகை ஆயில் பெயின்ட் தளம் : கேன்வாஸ் மார்டன் ஆர்ட் 

இந்த மார்டன் ஆர்டை கியூபிசம் என்று சொல்லுகிறார்கள். இதில் நமக்கு பரிசயம் உள்ள பொருட்களை பார்கிறோம் அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை.   இரும்பு பட்டரையில் அசைவற்றிருக்கும் இரும்பு பிளாக்கை கையில் பிடித்திருப்பது போல உள்ளது.  இசைகருவி அதனால் ஏற்படும் மெய்மறந்த நிலை ;  புத்தக வாசிப்பு அதனால் ஒரு அசைவற்ற நிலை ; உறக்கம் : ஆழ்நிலை ; இப்படி பல பரிமாணங்களை நமக்கு அளிக்கிறது.


பிகாசோ ஓவியம் : தலைப்பு : மஞ்சள் தொப்பி அணிந்த பெண்மணி : ஆண்டு :1925

போர்ட்ராய்ட் ஓவியம் இது Expressionism வகை அசைவுகள் நெளிவுகள் என சொல்லலாம்.  ஒரு பெண்மணி மஞ்சள் தொப்பி அணிந்துள்ளார் சிந்தனை வயப்பட்ட நிலை, கவலை;  பரிதவிப்பு;  அழுகை இப்படி பல நிலைகளை சித்தரிக்கிறது. முக்கியமாக கண்களின் எக்ஸ்ப்ரசன் கவனிக்க வேண்டியவை.


பிகாசோ ஓவியம் : பிளாஸ்டர் ஹெட் மார்டர்ன் ஆர்டின் சரலிஸம் வகை [1925]

இயந்திரத்தனமான மனித வாழ்க்கை என்று சொல்லலாம். மனிதன் வெளிப்பார்வைக்கு ஒன்றாகவும் உள்ளுக்குள் பல வாகவும் இருக்கிறான் அதைக் குறிக்க பிளாஸ்டர் ஹெட், இயந்திர கைகள்; கால்கள்; வீடு ; அலுவலகம் ; செழிப்பிழந்த வாழ்வை குறிக்க வாடிய செடி ; படிப்பு ; வேலை ; மொத்ததில் அசைவற்றிருக்கும் ஒரு சட்டம் என பல பரிமாணங்கள்.


பிகாசோ ஓவியம் : தலைப்பு : ஈசலும் வடிவமைப்பும் : ஆண்டு :1926

ஓவியர்கள் வரைய பயன்படுத்தும் போர்டு ஈசல் ஒரு அறையில் கிடத்தப்பட்டுள்ளது பலவித கேன்வாஸ்கள் அதன் மீது போர்த்திவைக்கப்பட்டுள்ளன. அசையாத ஜாடியை போல உயிரோட்டமான ஓவியம் உறங்குகிறது என பொருள் கொள்ளலாம்.


பிகாசோ ஓவியம் : தலைப்பு : கோடீஸ்வரரின் பணி இடம் : ஆண்டு :1926

ஒரு பணக்கார சீமானின் பணியிடம் எப்படி இருக்கும் ?  பல அழங்காரங்களுடன் ; பணத்தின் செழுமை பளிச்சிடும் பொருட்கள் ; பிரம்மாண்டம் ; வித்தியாசமான வடிவமைப்புகள், நவ நாகரீகம் ....இப்படி

Friday, June 8, 2012

ராஜாரவிவர்மா - Raja Ravi Varma [ 1848 -1906 ]
ராஜாரவிவர்மா கேரளாவில் கிளிமனூரில் பிறந்தவர்.  ஐந்தாவது வயதிலேயே வீடு முழுக்க சுவரில் விலங்குகளும் பார்த்த காட்சிகளையும் வரைய ஆரம்பித்து விட்டார்.  . திருவனந்த புரத்தின் அரண்மனையிலேயே தங்கி படித்து ஆயில் பெயிண்டிங்கில் நுணுக்கங்கள் கற்று ஓவியத்தில் 14 வயதிலேயே தேர்ந்த கலைஞராகிவிட்டார்.  மைசூர், பாரோடா, அரண்மனைகளில் இவரின் ஓவியங்கள் இந்தியாவின் பெருமையை பறைசாற்றுகின்றன. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலகட்டம்.   பிரிட்டன் ராஜவம்சத்தினராலும், இந்திய மகாராஜாக்களாலும் பெரிதும் புகழப்பட்ட சிறந்த ஓவியர்

பெரும்பாலான வீடுகளில் கையில் வீணையுடன் சரஸ்வதி ஓவியம் ஜனரஞ்சகமானது.  இவரது ஓவியங்களில் தஞ்சாவூரின் கலாச்சாரமும் இருக்கும், ஐரோப்பாவின் ஓவியக் கலை அம்சமும் கலந்திருக்கும். மூன்று கட்டங்களாக இவரின் ஓவியங்கள் பகுக்கப்படுகிறது. போர்ட்ராய்ட் என்று சொல்லக்கூடிய முகம் மற்றும் அது சம்பந்தமான உருவ ஓவியங்கள், வாழ்வியல் சம்பந்தப்பட்ட ஓவியங்கள். அனைத்தும் புதுமை மற்றும் மரபு சார் ஓவியங்கள்.

"வெளி நாட்டினருக்கு இந்திய ஓவியங்கள் குறித்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் அது மிகையில்லை."

Popular Posts