Wednesday, June 12, 2013

[findings] அலங்கார ஓவியர் அல்போன்ஸ் முக்‌ஷா

ஓவியர் அல்போன்ஸ் முக்‌ஷா
Alfons Maria Mucha [1860 -1939]

அல்போன்ஸ் மரிய முக்‌ஷா செக் குடியரசில் பிறந்தவர். இளம் வயதில் இருந்து ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.   அதுவும் ஓவியத்தில் அலங்கார வகை (Decorative art) இவருக்குப் பிடித்த ஒன்று.  விளம்பரக் கம்பெனிக்காக சாரா பெர்ன்ஹர்ட் எனும் நடிகையின் உருவ ஓவியங்களை வரைந்து கொடுத்தார்.   அழகுமிக்க அலங்கார வகை ஓவியங்களை புத்தக நிறுவனங்களுக்காகவும், காலண்டர், நகை,கார்பெட், தியேட்டர் செட்களுக்காகவும் இவரது கலை பயன்பட்டது.


 ”முக்‌ஷா ஸ்டைல்” என்றே இவரது ஓவியங்கள் புகழ் பெற்றது. பின்னாளில் இந்த வகை பிரெஞ்சில் “ஆர்ட் நூவு” (art Nouveau)எனும் ஒரு தனி வகை ஓவியமாக அழைக்கப்பட்டது. இதை தமிழில் ”புதிய கலை” எனச் சொல்லலாம்.

1900ல் பாரிஸில் நடைபெற்ற உலக ஓவிய கண்காட்சியில் உலக அளவில் பேசப்பட்டார்.

முதல் உலகப்போருக்குப்பின் செக்கோஸ்லோவோகியா சுதந்திரநாடாகப்பிரகனப்படுத்தப்பட்ட பின் அந்நாட்டு தபால்தலை, பணம், அரசாங்க பத்திர டிசைன்களில் இவரின் உழைப்பு இருந்தது.

1928 ப்ராகுவில் ”ஸ்லேவ் எபிக்” எனும் தலைப்பிளான 20 பெரிய ஓவியங்களை படைத்தார். இந்த ஓவியங்கள் செக் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வரலாற்றை பேசியது.

தனது 78வது வயதில் 14 July 1939 ல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை...
என்ற கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை ஞாபகப்படுத்துகிறது இந்த ஓவியங்கள்.

ஒவ்வொரு காலத்திற்கும் (Seasons) ஒவ்வொரு ஓவியம்

^ Autumn(1896)

^ Spring (1896)

^ Summer (1896)


^ Winter (1896)









^ Self  Portrait

Popular Posts