Friday, October 19, 2012

ரசிக்கும் சீமான் - லியொனார்டோ (ஓவியம்)


இவரின் ஓவிய கலை நயத்தை புரிந்து கொள்ள , ஒரு ஒப்புமைக்காக, இரண்டு ஓவியங்களை பகிர்ந்துள்ளேன். உயிரோவியம் என்று சொல்கிறோமே அதை நீங்கள் உணரலாம். காற்றில் அலையும் கேச அழகை சிலாகிக்க முடியும்.

இந்த ஸ்கெட்ச் ஒரு பெண்ணின் தலைமுடி ஒப்பனை மற்றும் முக வடிவம் 1506 ல் பேப்பரில் வரையப்பட்டது. இது போர்ட்ராய்ட் என்று சொல்லபடும் உருவ ஓவியம். இங்கிலாந்தில் வின்சர் கோட்டையில் ராயல் கலெக்சனாக உள்ளது.




அடுத்து வருவது அதே அமைப்பில் உள்ள பெண்ணின் உருவம் இது மர பளகையில் வரையப்பட்டது ( ஆண்டு 1508). வாட்டர் கலர் பசை கொண்டு தீட்டப்பட்டது. இந்த ஓவியத்தை பார்த்தால் உருவம் நம் கண்முன் இருப்பது போன்று உணர முடியும் ( ஒரு 3டி போல) இது இத்தாலியில் பார்மா (Galleria Nazionale, Parma, Italy) கேலரியில் வைக்கப்பட்டுள்ளது.



அவர் தன்னைதானே வரைந்து கொண்டது ஆண்டு 1513


லியொனார்டோ பற்றிய சிறு குறிப்பு :

லியொனார்டோ டா வின்சி [Leonardo da vinci ] - 1452 -1519 

கட்டிடக்கலைஞர்,பொறியியலாளர்,கண்டுபிடிப்பாளர்,உடற்கூறு இயலார்,வானியலாளர்,சிற்பி, இப்படி பல துறைகளில் ஆர்வம் கொண்டவர் என்ற அளவினோடே சிறப்பிக்கப்படுகிறார். லத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாததால் இவர் ஒரு விஞ்ஞானி அல்ல என்று புரக்கணிக்கப்பட்டார். பல்துறை மேதை யாக இருந்தாலும் ஓவியத்திற்கென்றே புகழப்பட்டார்.

இத்தாலியிலுள்ள வின்சி இவரது பிறந்த ஊர். புளோரன்சில் தந்தையுடன் வளர்ந்தார். இவரது ஓவிய குரு வெரோக்கியோ. முழுமையான ஓவியங்கள் 17 மட்டுமே. அறிவியல் சம்பந்தமாக கலைகளஞ்சியம் வெளியிட விரும்பி பல டிராப்ட்களை வரைபடங்களாக வைத்திருந்தது பிற்காலத்திலேயே அறியப்பட்டது. இவரது சுபாவம் முழுமையாக ஒரு ஓவியத்தை முடிக்காமல் அடுத்ததிற்கு சென்றுவிடுவது என்று இவரைப்பற்றி சொல்கிறார்கள்.

மோனாலிசா [Monalisa], கடைசி விருந்து [the last supper]பலரும் அறிந்த ஓவியங்கள்.

மைக்கலாஞ்சலோ சமகாலத்தவர்.

இவரது இறுதி யாத்திரையில் 60 பிச்சைக்காரர்கள் பின் தொடர்ந்தனர் இவர் விருப்பத்தின் படி.

Thursday, October 18, 2012

[Findings] [பகுதி 3 ]அசத்தும் பெண் ஓவியர் - அலெக்டர் ஃபென்ஸர்


மேலும் பல ஓவியங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
அலெக்டர் ஃபென்ஸர் பற்றி முதல் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் பகுதியை படிக்க

இரண்டாம் பகுதியை படிக்க













Saturday, October 6, 2012

[Findings] [பகுதி 2 ]அசத்தும் பெண் ஓவியர் - அலெக்டர் ஃபென்ஸர்


மேலும் பல ஓவியங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
அலெக்டர் ஃபென்ஸர் பற்றி முதல் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் பகுதியை படிக்க 










தொடர்ந்த பல பகுதிகளாக இவரது ஓவியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ; தொடர்பில் இருங்கள்.

Thursday, October 4, 2012

[Findings]அசத்தும் பெண் ஓவியர் - அலெக்டர் ஃபென்ஸர்


முதன் முதலில் இவரது ஓவியங்களை பார்க்கும் எவரும்  வியப்பின் எல்லைக்கு சென்றுவிடுவர். இப்படியும் ஓவியங்களை படைக்கமுடியுமா ? அப்படி ஒரு ஈர்ப்பு இவரின் ஓவியங்களில் மிளிர்கிறது.

இந்த ஓவியரின் இயற்ப் பெயர் க்ளாடியா [ Claudya ] ஓவியமுகம் அலெக்டர் ஃபென்ஸர்  [Alector Fencer]  இவர் ஜெர்மனியில் பிறந்தவர். ஃப்ரிலான்ஸ் ஓவியரான இவர் இயற்கை ஆர்வளர். நண்பர்களுடன் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தவர் அதனால் பெற்ற உலக அனுபவங்கள் இவருக்கு இப்படிப்பட்ட இயற்கைவினோத உருவ ஓவியங்களை வரைய தூண்டுதலாக இருந்து இருக்குமோ ?

தனித்தன்மை வாய்ந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் நம்மை
ஏதோ ஒரு மாய உலகத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது.

க்ளாடியா 2006ல் கிராபிக் டிசைனிங் முடித்தார். வருங்காலத்தில் லிப்ஸிங்கில் விசுவல் ஆர்ட் அகாடமியை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக குறிப்பிடுகிறார்.  இவரது ஓவிய திறமை இவரை இங்கிலாந்திற்கு இட்டு சென்றுள்ளது.

தொடர்ந்த பல பகுதிகளாக இவரது ஓவியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ; தொடர்பில் இருங்கள்.







Popular Posts