Tuesday, July 16, 2013

மிகப் பழமையான குகை ஓவியம் - அவதாரில்


மேலே காணும் இந்த குகை ஓவியத்தில் பலவகை காட்டு விலங்குகளின் கூட்டம் உயிரோட்டமாக தென்படுகிறது. 


நேர்த்தியான, இந்த ஓவியத்தில் என்னை கவர்ந்தது ஒரு குதிரை அதன் தலையில் இருந்து நீண்ட வால் போன்ற பகுதி இருக்கிறது.  இந்த விலங்கு காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம்.   எனக்கு இதே குதிரை உருவத்தை அவதார் ஆங்கிலப் படத்தில் கிராபிக்ஸில் கொண்டு கொண்டுவந்திருப்பது போல் தோன்றியது (உங்களுக்கு எப்படி தெரிகிறது ?)















இந்த குகை ஓவியத்தின் வரலாறு இதோ : 

நான்கு சிறுவர்கள் தாங்கள் வசித்த காட்டுப்பகுதியில் காலார நடந்து சென்ற போது கண்டறியப்பட்டது இந்த குகை ஓவியங்கள் (Lascauz cave ). 

இந்த குகை ஓவியங்கள் பிரான்ஸின் டார்டோனே (Dordogne) என்ற இடத்தில் அறியப்பட்ட ஆண்டு 1940. இந்த ஓவியங்கள் சூமார் 17000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இரண்டாம் உலப்போர் சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் வெளி உலகத்திற்கு எட்டு ஆண்டுகள் கழித்து தெரிந்தது.  1963 வரையிலும் இதை பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்ததாம்.  வரலாற்றுக்கு முந்திய காலத்தின்(prehistoric) உலகின் சிறந்த ஓவியமாக இதை கருதுகிறார்கள்,ஃபிரான்ஸில்.


Monday, July 1, 2013

முப்பரிமாண ஓவியர் M.C. எஷர்


Maurits Cornelis Escher [1898 – 1972]

டச்சு எழுத்துரு ஓவியர் எம்.சி. எஷர் (மாரிட்ஸ் குர்ன்லிஸ் எஷர்) தனக்கென முத்திரை பதித்தவர். இவரது ஓவியங்களை  மீசோ டிண்ட், அச்சு கலை பாணி(லித்தோ), கணித வரைகலை, முப்பரிமாண வியூகம்,நிழலுறுக்கள்... என பல வகைப்பாட்டியலில் சேர்க்கிறார்கள். (மேலும் மர வேலைப்பாடும் அறிந்த ஜீனியஸ்) எனக்கு இவரது ஓவியங்களை பார்க்கையில் நம்மூர் (தமிழக) ஓவியர் ராமு அவர்களின் ஓவியங்கள் மனக்கண் முன் விரிந்தன.

ஃப்ரிஸ்லாந்தில் (Friesland) சிவில் இன்ஜினியரின் மகனாக பிறந்த தாலோ என்னவோ இவரக்கு முப்பரிமாண ஓவியங்கள் எளிதாக கைகூடியது.  இவர் கற்பனைப் பார்வையில் பட்ட ஒவ்வொன்றும் இவரின் தூரிகையில் முப்பரிமாணங்களாக உயிர் உருவம் பெற்றன.

அரசியல் ஈடுபாடு மிக்க இவர், 1937ல் பெல்ஜியதிற்கு குடிபெயர்ந்தார் அங்கிருந்து தொடங்குகிறது (லைப் அண்ட் ஸ்ட்ரீட் )இவரது ஓவிய உலகம்.  இரண்டாம் உலப்போர் இவரை நெதர்லாந்துக்கு தள்ளியது.

கருப்பு வெள்ளையில் வரைந்த ஓவியங்கள் அதன் பரிமாணம், வியூகம் நம்மை ஒரு புது உலகத்திற்கு அழைத்து செல்கிறது.  "தன்னை தானே வரைந்து கொள்ளும் கைகள் (drawing hands), வானமும் தண்ணீரும் (sky and water), ஏற்றமும் இறக்கமும் ( Ascending and Descending)
இன்னும் எண்ணற்ற ஓவியங்கள் நம் நெஞ்சத்தை அள்ளுகின்றன. இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று அவர் இடது கை பழக்கம் உள்ளவர்.

1958 ல் Regular Division of the Plane என்ற ஒரு புத்தகம் வெளியிட்டார். இந்த புத்தகம் கணிதம் சார்ந்த டிசைன்களையும், வரைகலை(DRAFTS) நுணுக்கங்களை, மர உருவக் கலைகளை விளக்கியது.

ஹாகுவே அருங்காட்சியகத்தில்(Hague Museum) இவரது ஓவியங்கள் காட்சிக்குள்ளன இன்னும்..,the National Gallery of Art (Washington, DC); the National Gallery of Canada (Ottawa); the Israel Museum (Jerusalem); Huis ten Bosch (Nagasaki, Japan); and the Boston Public Library

Drawing Hands, lithograph (1948)

House of Stairs, lithograph (1951)


















Popular Posts