Friday, December 7, 2012

ஓவிய மேதை நார்மன் ராக்வெல் (Part 2)நார்மன் ராக்வெல் அவர்களின் உருவ ஓவியங்கள் நம்மை வெகுவாக கவர்கின்றன.  ஒவ்வொரு ஓவியத்திற்கும் அவர் எடுத்துக்கொண்ட பொருமை, சிரத்தை வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து செல்கிறது.  நுண்ணிய முக பாவங்கள் மற்றும் டீட்டெயில் என்று சொல்லப்படுகின்ற பொருள் அமைவு, எதார்த்தம், துல்லியமான வரை கோடுகள் இப்படி பலவற்றை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.  அவருக்கு இவ்வோவியங்கள் சாதனைகள் அல்ல ஆனால் தம் வாழ்நாளில் இத்துறைக்கென ஒரு வகைப்பாட்டை ஏற்படுத்தி வாழ்நாள் சாதனையின் உச்சத்தில் அவர் இருந்தார் என்பதற்கு இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.


இந்த ஓவியத்திற்கு ஒரு வரலாற்று பின்புலம் உள்ளது. 6 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுமி வெள்ளையர்கள் படிக்கும் பள்ளிக்கு (நியூ ஆர்லேன்ஸ்) செல்கிறாள். அவளின் பாதுகாப்பிற்காக நான்கு எஸ்கார்டுகள் அதுவும் யுஎஸ் டெப்டி மார்ஷல்ஸ் செல்கிறார்கள்.  சிறுமிக்கு பின்புறம் உள்ள சுவற்றில் "நைஜர் "என்னும் எழுத்துக்கள். நிறவெறியர்கள் விட்டெறிந்த தக்காளி சுவரில் பட்டு தெரித்திருக்கிறது. ஜனவரி 14ல் 1964 ல் ஒரு பத்திரிக்கையின் நடுபக்கத்தில் வெளியாகியது. அக்காலத்திய நிற வெறியை இது வெளிப்படுத்துகிறது.

இவரின் ஓவியத்தை விளக்க வேண்டிய அவசியம் இல்லை இருப்பினும் புதியவர்களுக்காக இரண்டொரு வரிகள் !

"வசந்ததின் பூக்கள்" எனும் இந்த ஓவியத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு சிட்டுகுருவி வாசற்படியில் அமர்ந்திருப்பது தெரியும். (வீட்டினுள் ஒரு பொன் வசந்தம் !)


இத்துணைபேர் அதட்டலுக்கு அசையாமல் வழியை மறித்து அடம்பிடிக்கும் செல்ல நாய். (சிலபேர் அதனிடம் கெஞ்சுகிறார்கள் !)

நாய்குட்டிகளுக்கு பாசத்தோடு உணவளிக்கும் சிறுவன் பாசத்தோடு முகம் பார்கும் தாய்.

நேருவின் உருவப்படம் இதில் இந்தி வார்த்தை "ஷாந்தி" மற்றும் பின் புலத்தில் இந்தியர்களின் முகங்கள், நேட்டிவிட்டியோடு ;


உடையை ஹேங்கரில் தொங்கவிட்டு சந்தோசமாக பாலதின் அடியில் குளிக்கும் வழிப்போக்கன் (ஒவியம் நம்மை அந்த இடத்திற்கே அழைத்துசெல்கிறது. சந்தோச தருணங்கள் ! )

தண்ணீரில் விழுந்த சிறுமியை தாவி எடுத்துவரும் வீரர் தோளில் செல்ல பூனை. (கடமை !)


தாதாவும் பேரனும் நாய்குட்டியோடு கடலை ரசிக்கிறார்கள். இவர்களோடு வானத்தில் வட்டமிடும் பறவைகள். (இப்படிப்பட்ட அனுபவம் எல்லோருக்கும் வாய்கிறதா?)


குழந்தையின் அழுகையை எப்படி நிறுத்துவது? என்று புத்தகத்தை படித்து ஆராய்ச்சி செய்யும் "பேபி ஸிட்டர் "


புகைத்துப் பார்கும் சிறுவர்கள் கண்டுபிடித்துவிட்ட நாய். இதில் ஒருவன் ஏழை மற்றவன் வசதியானவன் (நண்பர்களிடம் ஏற்றத்தாழ்வு இல்லை)  குறும்பு !செருப்பு தைக்கும் தொழிலாளியான தாத்தாவும் சிறுமியும் பொம்மையின் ஷூவை வியந்து ஆராய்ச்சி செய்கிறார்கள் .


காலைமுதல் இரவு வரை ஒரு சிறுமியின் வாழ்க்கை.(யோசித்தால் நம் சிறுவயதில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கலாம்)

குழந்தையின் சிரிப்பில் லயிக்கும் தாய். (பாசம்)


ஊசி போடும் டாக்டருக்கு பின்புறத்தை காட்டி இவர் டாக்டர் தான ? என சர்டிபிகேட்டை சரிபார்க்கும் சிறுவன் (ஹா..ஹா.ஹா..)


அப்பாவும் அம்மாவும் சண்டையிட செய்வதறியாது அழுகும் சிறுவன். அவனோடு பூனையும் நாயும்.


விளக்கின் ஒளியில் சிறுமியும் சிறுவனும் தத்துரூபமான காட்சி


முத்தத்தை பரிமாறிக்கொள்ளும் இளசுகள் பெண்ணின் கைகளையும் கால்களையும் கவனியுங்கள். (உணர்வின் வெளிப்பாடு ! )


உடைந்த பீப்பாயை டேபிலாக மாற்றி எழுதும் சிறுவன் யோசிக்க உதவி வேண்டுமா ! என கேட்கும் வளர்ப்பு நாய்.

Thursday, December 6, 2012

[ Findings ]ஓவிய மேதை நார்மன் ராக்வெல் (Part1)


ஓவிய மேதை நார்மன் ராக்வெல்
Norman Percevel Rockwell 1894 - 1978 

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஓவியர் நார்மன் ராக்வெல். பத்திரிக்கை துறையில் இவர் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது.
சாட்டர்டே ஈவினிங் போஸ்டில் 40 ஆண்டுகாலம் தன் வாழ்நாளை கழித்தார்.
நியூயார்கில் பிறந்தவர். 14 வயது முதல் ஓவியப்பள்ளியில் காலடி வைத்தவர் வாழ்நாள் முழுக்க ஓவியத்தை தனது உயிர் மூச்சாக கொண்டிருந்தார்.

அமெரிக்காவின் பல பிரபல பத்திரிக்கைகளில் பணியாற்றியுள்ளார்.  [செயின் நிகோலஸ், பி எஸ் ஏ, பாய்ஸ் லைப் இதில் சில) ஓவியத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

கார்ல் ஹெச் க்ளவுடி எனும் முதல் புத்தகத்தில் இயற்கை குறித்த ஓவியங்கள் இவரை பத்திரிக்கை துறையில் சிறப்பான இடத்திற்கு அழைத்து சென்றது.

19 வயதிலேயே பாய்ஸ் லைப் இதழில் ஆர்ட் எடிட்டர் ஆனார்.

முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இவரின் தனிதிறமை பெற்ற ஓவியங்கள் புகழப்பட்டன.

முதலாம் உலக்ப்போர் சமயத்தில்அமெரிக்க ராணுவத்தில் கடினமான முயற்சியில் சேர்ந்தார் இருப்பினும் அவருக்கு அங்கு கிடைத்த உத்தியோகம் ராணுவ ஆர்டிஸ்ட்.

மாஸாசுசெட்ஸில் ( Stockbridge-massachusetts) இவரின் மியூசியம் உள்ளது இதில் 700 ஒரிஜினல் ஓவியங்கள் இங்கு உள்ளது.

இவருக்கு 1977 ல் அமெரிக்காவின் உயரிய விருதான ஜனாதிபதிமெடல் இவருக்கு (presidential medal of freedom) அளித்து கெளரவிக்கப்பட்டது.

ஓவிய மேதை நார்மன் ராக்வெல் தமது 84 ஆவது வயதில் இயற்கை எய்தினார் (நவ.8, 1978).

வாழ்நாள் முழுக்க இவர் வரைந்து தள்ளிய சிறப்பான ஓவியங்கள் சுமார் 4000 இருக்கும்.


இவரின் புகழ்பெற்ற ஓவியங்கள் :
Scout at Ship's Wheel (first published magazine cover illustration, Boys' Life, September 1913)
Santa and Scouts in Snow (1913)
Boy and Baby Carriage (1916; first Saturday Evening Post cover)
Circus Barker and Strongman (1916)
Gramps at the Plate (1916)
Redhead Loves Hatty Perkins (1916)
People in a Theatre Balcony (1916)
Tain't You (1917; first Life magazine cover)
Cousin Reginald Goes to the Country (1917; first Country Gentleman cover)
Santa and Expense Book (1920)
Mother Tucking Children into Bed (1921; first wife Irene is the model)

 [அடுத்த பகுதியில் இன்னும் சில ஓவிங்களோடு தொடர்கிறேன்... ]Sunday, November 18, 2012

[Findings] ரூசோ ஹென்றியின் ஓவியங்கள் !

Rousseau Henri (or) Le Douanier Rousseau  [ 1844 - 1910 ]
Scout Attacked by a Tiger 1904 (The Barnes Foundation, Merion, Pennsylvania )
Combat of a Tiger and a Buffalo - 1909  


தூங்குகின்ற ஜிப்ஸி (The Sleeping Gypsy- 1897
Oil on canvas) இது நியூயார்கின் மார்டர்ன் மியூசியத்தில் உள்ளது.திக்கு தெரியா காட்டில் நடந்து செல்லும் பெண் (Woman Walking in an Exotic Forest) 1905 Oil on canvas இவைகள் பென்சில்வேனியாவில் உள்ளது Rousseau Henri (or) Le Douanier Rousseau  [ 1844 - 1910 ]


ரூசோ ஹென்றி இவர் ஒரு பிரெஞ்சு ஓவியர்.  இவருக்கு இன்னொரு பெயர் லெ டானெயர் ரூஸோ.  டானெயர் என்றால் சுங்க அதிகாரி
ஆனால் இவர் அந்த ரேங்கை இவர் பணியாற்றிய   சுங்க துறையில் அடையவில்லை.  அதற்கு முன்பு  இராணுவத்தில் சிலகாலம் மெக்சிகோவில் பணி புரிந்திருக்கிறார்.  ஓவியம் வரைவதை ஒரு பொழுது போக்காக கொண்டிருந்தாலும் பணி ஓய்வுக்கு  (1893 )முன்னரே இவரது ஓவியங்கள் பேசப்பட்டன .

இவர் வறுமையில் வாடியதாக கேள்விப்படுகிறோம்.  இவருக்கு ஒவியம் மீதிருந்த  காதல் இவருக்கு பாராட்டை பெற்று தந்தது. அதிலும் காட்டு ஓவியங்கள்  இவரை போலவே எதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் இருந்தன.

இவர் காலத்து ஓவியர்கள் ( Bouguereau and Gerome) இவரை ஏளனமாகவே பார்த்தார்கள்.  1908 ல் பிகாஸோ இவரை அரை மனதாக பாராட்டியதாக அறிகிறோம்.

இவரின் இறுதி ஓவியம் "கனவு" (Dream 1910) இது நியூயார்க் மியூசியத்தில் (MOMA) உள்ளதாக அறிகிறோம்.

இறப்பிற்கு பின் ஏழையின் கல்லறையில் இவரது உடல் புதைக்கப்பட்டது
அதன் பிறகே இவரின் ஓவியத்தின் நேர்மை பரவலாக பாராட்டு பெற்று பிரபலமானது ஒரு சோகமான நிகழ்வே !
ரூஸோ ஹென்றி (self portrait)


Friday, October 19, 2012

ரசிக்கும் சீமான் - லியொனார்டோ (ஓவியம்)


இவரின் ஓவிய கலை நயத்தை புரிந்து கொள்ள , ஒரு ஒப்புமைக்காக, இரண்டு ஓவியங்களை பகிர்ந்துள்ளேன். உயிரோவியம் என்று சொல்கிறோமே அதை நீங்கள் உணரலாம். காற்றில் அலையும் கேச அழகை சிலாகிக்க முடியும்.

இந்த ஸ்கெட்ச் ஒரு பெண்ணின் தலைமுடி ஒப்பனை மற்றும் முக வடிவம் 1506 ல் பேப்பரில் வரையப்பட்டது. இது போர்ட்ராய்ட் என்று சொல்லபடும் உருவ ஓவியம். இங்கிலாந்தில் வின்சர் கோட்டையில் ராயல் கலெக்சனாக உள்ளது.
அடுத்து வருவது அதே அமைப்பில் உள்ள பெண்ணின் உருவம் இது மர பளகையில் வரையப்பட்டது ( ஆண்டு 1508). வாட்டர் கலர் பசை கொண்டு தீட்டப்பட்டது. இந்த ஓவியத்தை பார்த்தால் உருவம் நம் கண்முன் இருப்பது போன்று உணர முடியும் ( ஒரு 3டி போல) இது இத்தாலியில் பார்மா (Galleria Nazionale, Parma, Italy) கேலரியில் வைக்கப்பட்டுள்ளது.அவர் தன்னைதானே வரைந்து கொண்டது ஆண்டு 1513


லியொனார்டோ பற்றிய சிறு குறிப்பு :

லியொனார்டோ டா வின்சி [Leonardo da vinci ] - 1452 -1519 

கட்டிடக்கலைஞர்,பொறியியலாளர்,கண்டுபிடிப்பாளர்,உடற்கூறு இயலார்,வானியலாளர்,சிற்பி, இப்படி பல துறைகளில் ஆர்வம் கொண்டவர் என்ற அளவினோடே சிறப்பிக்கப்படுகிறார். லத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாததால் இவர் ஒரு விஞ்ஞானி அல்ல என்று புரக்கணிக்கப்பட்டார். பல்துறை மேதை யாக இருந்தாலும் ஓவியத்திற்கென்றே புகழப்பட்டார்.

இத்தாலியிலுள்ள வின்சி இவரது பிறந்த ஊர். புளோரன்சில் தந்தையுடன் வளர்ந்தார். இவரது ஓவிய குரு வெரோக்கியோ. முழுமையான ஓவியங்கள் 17 மட்டுமே. அறிவியல் சம்பந்தமாக கலைகளஞ்சியம் வெளியிட விரும்பி பல டிராப்ட்களை வரைபடங்களாக வைத்திருந்தது பிற்காலத்திலேயே அறியப்பட்டது. இவரது சுபாவம் முழுமையாக ஒரு ஓவியத்தை முடிக்காமல் அடுத்ததிற்கு சென்றுவிடுவது என்று இவரைப்பற்றி சொல்கிறார்கள்.

மோனாலிசா [Monalisa], கடைசி விருந்து [the last supper]பலரும் அறிந்த ஓவியங்கள்.

மைக்கலாஞ்சலோ சமகாலத்தவர்.

இவரது இறுதி யாத்திரையில் 60 பிச்சைக்காரர்கள் பின் தொடர்ந்தனர் இவர் விருப்பத்தின் படி.

Popular Posts