ஓவிய மேதை நார்மன் ராக்வெல்
Norman Percevel Rockwell 1894 - 1978
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஓவியர் நார்மன் ராக்வெல். பத்திரிக்கை துறையில் இவர் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது.
சாட்டர்டே ஈவினிங் போஸ்டில் 40 ஆண்டுகாலம் தன் வாழ்நாளை கழித்தார்.
நியூயார்கில் பிறந்தவர். 14 வயது முதல் ஓவியப்பள்ளியில் காலடி வைத்தவர் வாழ்நாள் முழுக்க ஓவியத்தை தனது உயிர் மூச்சாக கொண்டிருந்தார்.
அமெரிக்காவின் பல பிரபல பத்திரிக்கைகளில் பணியாற்றியுள்ளார். [செயின் நிகோலஸ், பி எஸ் ஏ, பாய்ஸ் லைப் இதில் சில) ஓவியத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.
கார்ல் ஹெச் க்ளவுடி எனும் முதல் புத்தகத்தில் இயற்கை குறித்த ஓவியங்கள் இவரை பத்திரிக்கை துறையில் சிறப்பான இடத்திற்கு அழைத்து சென்றது.
19 வயதிலேயே பாய்ஸ் லைப் இதழில் ஆர்ட் எடிட்டர் ஆனார்.
முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இவரின் தனிதிறமை பெற்ற ஓவியங்கள் புகழப்பட்டன.
முதலாம் உலக்ப்போர் சமயத்தில்அமெரிக்க ராணுவத்தில் கடினமான முயற்சியில் சேர்ந்தார் இருப்பினும் அவருக்கு அங்கு கிடைத்த உத்தியோகம் ராணுவ ஆர்டிஸ்ட்.
மாஸாசுசெட்ஸில் ( Stockbridge-massachusetts) இவரின் மியூசியம் உள்ளது இதில் 700 ஒரிஜினல் ஓவியங்கள் இங்கு உள்ளது.
இவருக்கு 1977 ல் அமெரிக்காவின் உயரிய விருதான ஜனாதிபதிமெடல் இவருக்கு (presidential medal of freedom) அளித்து கெளரவிக்கப்பட்டது.
ஓவிய மேதை நார்மன் ராக்வெல் தமது 84 ஆவது வயதில் இயற்கை எய்தினார் (நவ.8, 1978).
வாழ்நாள் முழுக்க இவர் வரைந்து தள்ளிய சிறப்பான ஓவியங்கள் சுமார் 4000 இருக்கும்.
இவரின் புகழ்பெற்ற ஓவியங்கள் :
Scout at Ship's Wheel (first published magazine cover illustration, Boys' Life, September 1913)
Santa and Scouts in Snow (1913)
Boy and Baby Carriage (1916; first Saturday Evening Post cover)
Circus Barker and Strongman (1916)
Gramps at the Plate (1916)
Redhead Loves Hatty Perkins (1916)
People in a Theatre Balcony (1916)
Tain't You (1917; first Life magazine cover)
Cousin Reginald Goes to the Country (1917; first Country Gentleman cover)
Santa and Expense Book (1920)
Mother Tucking Children into Bed (1921; first wife Irene is the model)
[அடுத்த பகுதியில் இன்னும் சில ஓவிங்களோடு தொடர்கிறேன்... ]
அருமையான பதிவு .உங்களின் பதிவுகளுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகம் என்பதை அறிகிறேன் .ஆனால் உங்களை மாதிரி அந்த துறை பற்றி தெரிந்தவர்கள் இன்னும் நிறைய விரிவாக எழுதவேண்டும் .இது அறிவுரை அல்ல .வேண்டுகோள் .குறிப்பாக அது எந்தவகை ஓவியம் அதன் பின்புலம் போன்ற குறிப்புகளை மேலும் நீங்கள் எழுதவேண்டும் .வேண்டுகோள் .
ReplyDeleteதங்களின் மேலான கருத்துக்களுக்கு எனது நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்கிறேன் நண்பரே !
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று உங்களின் வலைத்தளம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள் ஓவியம் என்றால் எவ்வளவு அருமை நன்றாக உள்ளது,,பார்க்கhttp://blogintamil.blogspot.com/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-