ராஜாரவிவர்மா கேரளாவில் கிளிமனூரில் பிறந்தவர். ஐந்தாவது வயதிலேயே வீடு முழுக்க சுவரில் விலங்குகளும் பார்த்த காட்சிகளையும் வரைய ஆரம்பித்து விட்டார். . திருவனந்த புரத்தின் அரண்மனையிலேயே தங்கி படித்து ஆயில் பெயிண்டிங்கில் நுணுக்கங்கள் கற்று ஓவியத்தில் 14 வயதிலேயே தேர்ந்த கலைஞராகிவிட்டார். மைசூர், பாரோடா, அரண்மனைகளில் இவரின் ஓவியங்கள் இந்தியாவின் பெருமையை பறைசாற்றுகின்றன. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலகட்டம். பிரிட்டன் ராஜவம்சத்தினராலும், இந்திய மகாராஜாக்களாலும் பெரிதும் புகழப்பட்ட சிறந்த ஓவியர்
பெரும்பாலான வீடுகளில் கையில் வீணையுடன் சரஸ்வதி ஓவியம் ஜனரஞ்சகமானது. இவரது ஓவியங்களில் தஞ்சாவூரின் கலாச்சாரமும் இருக்கும், ஐரோப்பாவின் ஓவியக் கலை அம்சமும் கலந்திருக்கும். மூன்று கட்டங்களாக இவரின் ஓவியங்கள் பகுக்கப்படுகிறது. போர்ட்ராய்ட் என்று சொல்லக்கூடிய முகம் மற்றும் அது சம்பந்தமான உருவ ஓவியங்கள், வாழ்வியல் சம்பந்தப்பட்ட ஓவியங்கள். அனைத்தும் புதுமை மற்றும் மரபு சார் ஓவியங்கள்.
"வெளி நாட்டினருக்கு இந்திய ஓவியங்கள் குறித்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் அது மிகையில்லை."
தகவல் நமக்கு புதுசு - பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteநன்றி...நண்பரே.
Deleteசென்ற வாரத்தில் தான் ராஜாரவிவர்மாவின் ஒவியங்களை இணையத்தில் எடுத்து தாருங்கள் என்று நண்பர் ஒருவர் கேட்டார். அப்போது ராஜாரவிவர்மாவின் ஒவியங்களை கண்டு அசந்தேன். இன்று அவரை பற்றி தெரிந்து கொண்டேன். தகவல் அளித்தமைக்கு நன்றி நண்பரே
ReplyDelete