Tuesday, February 13, 2018

டாலியின் உருகும் கடிகாரங்கள்

20 ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியர்களில் "சர்ரியலிசம்" என்று சொல்லக்கூடிய கனவின் கற்பனையின் காட்சி வடிவங்களை தமக்கு என்று தனி பாணியில் தீட்டியவர் ஓவியர் "சல்வேடர் டாலி" இவர் ஓவியம் மட்டும் இல்லாது பண்முக தன்மை மிக்கவர். (Sculptor, Filmmaker, Printmaker, and Performance Artist)

இவரின் ஓவியங்களில் ஒன்றை இப்போது பார்போம். தலைப்பு The Persistence of Memory (1931) இதை தமிழில் இப்படிச் சொல்வோம் "ஞாபகத் தடம்" தமது 27 வது வயதில் இதை தீட்டியிருக்கிறார்.
ஒரு ஓவியம் சொல்லும் கருத்து இதுதான் என்பதை ஓவியர் சொன்னாலும் அதற்கு மேலாக பார்வையாளனின் கருத்துக்கள் வேறுபடும் ரசிப்பைப் பொறுத்து.



இந்த ஓவியம் எதை பற்றிப் பேசுகிறது என்று பார்த்தோமானால் கனவை , காலத்தை பற்றி என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

தியரிஆப் ரிலேட்டிவிட்டி ஐன்ஸ்டீன் கோட்பாடு பிரபலமாக இருந்த கால கட்டம் என்பதால் அதையும் கூட இந்த சித்திரம் செப்புகின்றது.

4 கடிகாரங்களில் ஒன்று முழுதாக தெரிகிறது. அந்த முதலாவது சிகப்பு கடிகாரத்தையும் எறும்புகள் மொய்க்கின்றன. எந் நேரமுமும்
சுறு சுறுப்பாக ஓடும் எறும்புகள் நேரத்தை தடுத்து நிறுத்திட இயலுமா?

நேரத்தை எதை வைத்து அளவீடு செய்கிறோம் ? எல்லாம் மாயை கற்பனை சரியான நேரம் என்ற ஒன்று உண்டா?

மற்ற 3 கடிகாரங்களும் சாக்லேட்டுகளை போல உருகி கிடக்கின்றன. பாலை வனத்தில் எல்லாம் உருகி உருக்குலைந்து போய் விட்டனவா?

ஒன்று வெட்டுப்பட்ட காய்ந்த மரத்தின் கிளையில் துணி காய்வது போல கிடக்கு.

இன்னொன்று தூங்கும் டாலியின் மேல் உருகிக் கிடக்கிறது.
அவர் கனவில் இருக்கிறார். கனவில் காணும் காட்சிகளுக்கு ஏது காலம்? விழித்துப் பார்த்தால் இது வேறு உலகம் வேறு காலம்.

அந்த கால கட்டத்தில் கை கடிகாரம் என்பதை காந்தி இடுப்பில் இணைத்திருந்த கடிகாரத்தோடு ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்.

கை கடிகாரம் என்பதே எளியவனுக்கு எட்டாக் கனி. பணம் படைத்தவர்களின் அந்தஸ்து சின்னமாக இருந்திருக்கிறது என்பதையும் இந்த ஓவியம் பேசு கிறது.


"#டாலியின்_உருகும்_கடிகாரங்கள்"

No comments:

Post a Comment

Popular Posts