Friday, May 10, 2013

[ Findings ]துயரத்துடன் முடிந்த ஓவியரின் வாழ்க்கை ( வான்கா)

 

வின்செண்ட் வான்கா நெதர்லாந்தில் பிறந்தவர். கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் எழுத்தராக (clerk) பணிபுரிந்தார்.  சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இன்னும் சில காலம் சமய தொண்டு (preacher) புரிந்தார். இவர் தமது 30 ஆவது வயதிற்கு பின்னாலே ஓவியம் வரைய ஆரம்பித்தார்,  என்பது கவனிக்கத்தக்கது. 1886 ல் பாரிசுக்கு புலம் பெயர்ந்த பின்னர்  ஓவிய புதுமையாளர்கள் அல்லது உணர்வுபதிவுவாத ஓவியர்களுடன் இவருக்கு ஏற்பட்ட தொடர்ப்பு இவரின் ஓவியங்களை மெருகேற்றியது என்று சொல்லலாம்.  ஜப்பானிய ஓவியங்களின் தாக்கம் இவரிடம் இருந்தது.

இவரின் முதல் ஓவியமான  உருளைகிழங்கு உண்போர்  ஏழை மக்களுடன் பழகியதன் வெளிப்பாடு.

நூற்றுக்கணக்கான ஓவியங்கள் வரைந்த இவரால் ஒரே ஒரு ஓவியம் மட்டுமே விற்கமுடிந்தது நெருடலான விசயம்.  அவரின் மறைவுக்கு பின்னரே உலக அளவில் மிகச்சிறந்த ஓவியங்களாக இவரது ஓவியங்கள் கணிக்கப்பட்டன.

இறுதி நாட்களில் இவர் மனநோயால் பீடிக்கப்பட்டார். தன் காதுமடல்களை அறுத்துக் கொண்டார். இறுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இறுதியில் 37 ஆம் வயதில் உயிர் நீத்தார்.  இன்றைக்கு அவரது ஓவியங்கள் விலை மதிக்க முடியாதவையாக கருதப்படுகிறது.

"The sadness will last forever." துயரம் என்றும் தொடரும் என்பது இவரின் இறுதி வாக்கியம்.

அவரின் திருவாசகம் :
” I cannot help that my pictures do not sell. Nevertheless the
time will come when people will see that they are worth more
than the price of the paints and my own living”


இவரின் சில படைப்புக்கள் :


மஞ்சள் வீடு
 ஓய்வு அறை Bedroom in Arles, 1888


The Sower, 1888


Starry Night Over the Rhone, (1888)





இன்னும் சில ஓவியங்கள்  மற்றும் தகவல்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்..


2 comments:

  1. ஒரு சிறு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்னும் ஏக்கம் ... 37 ஆம் வயதில் மரணம்... வருத்தப்படும் விசயம்...

    எவ்வளவு நுணுக்கமான ஓவியங்கள்...!!!

    நன்றி...

    ReplyDelete
  2. வியாபாரதிர்க்கு வரையாத ”மஞ்சள் மோகி வான்கா” வாழ்கை சோகமானது .அதன் அர்த்தங்களை இன்னும் தேடி கொண்டு இருப்பது வேடிக்கைதான் .

    ReplyDelete

Popular Posts