இவரின் முதல் ஓவியமான உருளைகிழங்கு உண்போர் ஏழை மக்களுடன் பழகியதன் வெளிப்பாடு.
நூற்றுக்கணக்கான ஓவியங்கள் வரைந்த இவரால் ஒரே ஒரு ஓவியம் மட்டுமே விற்கமுடிந்தது நெருடலான விசயம். அவரின் மறைவுக்கு பின்னரே உலக அளவில் மிகச்சிறந்த ஓவியங்களாக இவரது ஓவியங்கள் கணிக்கப்பட்டன.
இறுதி நாட்களில் இவர் மனநோயால் பீடிக்கப்பட்டார். தன் காதுமடல்களை அறுத்துக் கொண்டார். இறுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இறுதியில் 37 ஆம் வயதில் உயிர் நீத்தார். இன்றைக்கு அவரது ஓவியங்கள் விலை மதிக்க முடியாதவையாக கருதப்படுகிறது.
"The sadness will last forever." துயரம் என்றும் தொடரும் என்பது இவரின் இறுதி வாக்கியம்.
அவரின் திருவாசகம் :
” I cannot help that my pictures do not sell. Nevertheless the
time will come when people will see that they are worth more
than the price of the paints and my own living”
இவரின் சில படைப்புக்கள் :
மஞ்சள் வீடு
ஓய்வு அறை Bedroom in Arles, 1888
The Sower, 1888
Starry Night Over the Rhone, (1888)
இன்னும் சில ஓவியங்கள் மற்றும் தகவல்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்..
ஒரு சிறு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்னும் ஏக்கம் ... 37 ஆம் வயதில் மரணம்... வருத்தப்படும் விசயம்...
ReplyDeleteஎவ்வளவு நுணுக்கமான ஓவியங்கள்...!!!
நன்றி...
வியாபாரதிர்க்கு வரையாத ”மஞ்சள் மோகி வான்கா” வாழ்கை சோகமானது .அதன் அர்த்தங்களை இன்னும் தேடி கொண்டு இருப்பது வேடிக்கைதான் .
ReplyDelete