Friday, December 7, 2012

ஓவிய மேதை நார்மன் ராக்வெல் (Part 2)



நார்மன் ராக்வெல் அவர்களின் உருவ ஓவியங்கள் நம்மை வெகுவாக கவர்கின்றன.  ஒவ்வொரு ஓவியத்திற்கும் அவர் எடுத்துக்கொண்ட பொருமை, சிரத்தை வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து செல்கிறது.  நுண்ணிய முக பாவங்கள் மற்றும் டீட்டெயில் என்று சொல்லப்படுகின்ற பொருள் அமைவு, எதார்த்தம், துல்லியமான வரை கோடுகள் இப்படி பலவற்றை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.  அவருக்கு இவ்வோவியங்கள் சாதனைகள் அல்ல ஆனால் தம் வாழ்நாளில் இத்துறைக்கென ஒரு வகைப்பாட்டை ஏற்படுத்தி வாழ்நாள் சாதனையின் உச்சத்தில் அவர் இருந்தார் என்பதற்கு இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.


இந்த ஓவியத்திற்கு ஒரு வரலாற்று பின்புலம் உள்ளது. 6 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுமி வெள்ளையர்கள் படிக்கும் பள்ளிக்கு (நியூ ஆர்லேன்ஸ்) செல்கிறாள். அவளின் பாதுகாப்பிற்காக நான்கு எஸ்கார்டுகள் அதுவும் யுஎஸ் டெப்டி மார்ஷல்ஸ் செல்கிறார்கள்.  சிறுமிக்கு பின்புறம் உள்ள சுவற்றில் "நைஜர் "என்னும் எழுத்துக்கள். நிறவெறியர்கள் விட்டெறிந்த தக்காளி சுவரில் பட்டு தெரித்திருக்கிறது. ஜனவரி 14ல் 1964 ல் ஒரு பத்திரிக்கையின் நடுபக்கத்தில் வெளியாகியது. அக்காலத்திய நிற வெறியை இது வெளிப்படுத்துகிறது.

இவரின் ஓவியத்தை விளக்க வேண்டிய அவசியம் இல்லை இருப்பினும் புதியவர்களுக்காக இரண்டொரு வரிகள் !

"வசந்ததின் பூக்கள்" எனும் இந்த ஓவியத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு சிட்டுகுருவி வாசற்படியில் அமர்ந்திருப்பது தெரியும். (வீட்டினுள் ஒரு பொன் வசந்தம் !)


இத்துணைபேர் அதட்டலுக்கு அசையாமல் வழியை மறித்து அடம்பிடிக்கும் செல்ல நாய். (சிலபேர் அதனிடம் கெஞ்சுகிறார்கள் !)

நாய்குட்டிகளுக்கு பாசத்தோடு உணவளிக்கும் சிறுவன் பாசத்தோடு முகம் பார்கும் தாய்.

நேருவின் உருவப்படம் இதில் இந்தி வார்த்தை "ஷாந்தி" மற்றும் பின் புலத்தில் இந்தியர்களின் முகங்கள், நேட்டிவிட்டியோடு ;


உடையை ஹேங்கரில் தொங்கவிட்டு சந்தோசமாக பாலதின் அடியில் குளிக்கும் வழிப்போக்கன் (ஒவியம் நம்மை அந்த இடத்திற்கே அழைத்துசெல்கிறது. சந்தோச தருணங்கள் ! )

தண்ணீரில் விழுந்த சிறுமியை தாவி எடுத்துவரும் வீரர் தோளில் செல்ல பூனை. (கடமை !)


தாதாவும் பேரனும் நாய்குட்டியோடு கடலை ரசிக்கிறார்கள். இவர்களோடு வானத்தில் வட்டமிடும் பறவைகள். (இப்படிப்பட்ட அனுபவம் எல்லோருக்கும் வாய்கிறதா?)


குழந்தையின் அழுகையை எப்படி நிறுத்துவது? என்று புத்தகத்தை படித்து ஆராய்ச்சி செய்யும் "பேபி ஸிட்டர் "


புகைத்துப் பார்கும் சிறுவர்கள் கண்டுபிடித்துவிட்ட நாய். இதில் ஒருவன் ஏழை மற்றவன் வசதியானவன் (நண்பர்களிடம் ஏற்றத்தாழ்வு இல்லை)  குறும்பு !



செருப்பு தைக்கும் தொழிலாளியான தாத்தாவும் சிறுமியும் பொம்மையின் ஷூவை வியந்து ஆராய்ச்சி செய்கிறார்கள் .


காலைமுதல் இரவு வரை ஒரு சிறுமியின் வாழ்க்கை.(யோசித்தால் நம் சிறுவயதில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கலாம்)

குழந்தையின் சிரிப்பில் லயிக்கும் தாய். (பாசம்)


ஊசி போடும் டாக்டருக்கு பின்புறத்தை காட்டி இவர் டாக்டர் தான ? என சர்டிபிகேட்டை சரிபார்க்கும் சிறுவன் (ஹா..ஹா.ஹா..)


அப்பாவும் அம்மாவும் சண்டையிட செய்வதறியாது அழுகும் சிறுவன். அவனோடு பூனையும் நாயும்.


விளக்கின் ஒளியில் சிறுமியும் சிறுவனும் தத்துரூபமான காட்சி


முத்தத்தை பரிமாறிக்கொள்ளும் இளசுகள் பெண்ணின் கைகளையும் கால்களையும் கவனியுங்கள். (உணர்வின் வெளிப்பாடு ! )


உடைந்த பீப்பாயை டேபிலாக மாற்றி எழுதும் சிறுவன் யோசிக்க உதவி வேண்டுமா ! என கேட்கும் வளர்ப்பு நாய்.

9 comments:

  1. ஒரு ஓவிய மேதையின் அசத்தலான ஓவியங்களை பகிர்ந்து ரசிக்க வைத்தமைக்கு நன்றிகள்! அருமையான பகிர்வு!

    ReplyDelete
  2. மிக அருமையான ஓவியங்கள். உணர்வுகளை வெளிப்படுத்த ஓவியம் சிறந்த படைப்பு

    ReplyDelete
  3. Replies
    1. kindly se my drawing also.
      link. below.
      http://tamilbloggersunit.blogspot.in/2013/01/blog-post_4678.html#comment-form

      Delete
    2. நன்றி பட்டாபி சார்... பொருமையான உங்கள் கைவண்ணம், உங்கள் ஆன்மீக ஈடுபாடு அதற்கு கைகொடுக்கிறது..

      Delete
    3. நன்றி கலாகுமாரன் அவர்களே.
      ஆன்மிகம் என்பது வேறொன்றுமில்லை
      மனம் பதட்டபடாமல்அமைதியாய் இருப்பதுதான்.
      அதுவும் எந்த சூழ்நிலையிலும் அந்த நிலையில் இருப்பது.
      அந்த நிலையை அடைய பல முறைகளை நான் கையாளுகிறேன்.
      அதில் படம் வரைவதும் அதற்க்குவர்ணம் தீட்டுவதும்.
      படம் நன்றாக வந்தால் வரைபவருக்கும் திருப்தி
      .காண்பவருக்கும் மகிழ்ச்சி.
      குறை காணுவோரையும் மனம் பதட்டபடாமல்
      ஏற்றுக்கொண்டால் நாம் ஆன்மீகத்தில் அடைவோம் வெற்றி.
      என்னுடைய மற்ற படங்களையும் பாருங்கள்.
      நிச்சயம் உங்களுக்கு அவைகள் பல சேதிகள் சொல்லும்.

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி சுப்பு ரத்தினம்.

      Delete

Popular Posts