Sunday, November 18, 2012

[Findings] ரூசோ ஹென்றியின் ஓவியங்கள் !

Rousseau Henri (or) Le Douanier Rousseau  [ 1844 - 1910 ]








Scout Attacked by a Tiger 1904 (The Barnes Foundation, Merion, Pennsylvania )








Combat of a Tiger and a Buffalo - 1909  


தூங்குகின்ற ஜிப்ஸி (The Sleeping Gypsy- 1897
Oil on canvas) இது நியூயார்கின் மார்டர்ன் மியூசியத்தில் உள்ளது.



திக்கு தெரியா காட்டில் நடந்து செல்லும் பெண் (Woman Walking in an Exotic Forest) 1905 Oil on canvas இவைகள் பென்சில்வேனியாவில் உள்ளது 



Rousseau Henri (or) Le Douanier Rousseau  [ 1844 - 1910 ]


ரூசோ ஹென்றி இவர் ஒரு பிரெஞ்சு ஓவியர்.  இவருக்கு இன்னொரு பெயர் லெ டானெயர் ரூஸோ.  டானெயர் என்றால் சுங்க அதிகாரி
ஆனால் இவர் அந்த ரேங்கை இவர் பணியாற்றிய   சுங்க துறையில் அடையவில்லை.  அதற்கு முன்பு  இராணுவத்தில் சிலகாலம் மெக்சிகோவில் பணி புரிந்திருக்கிறார்.  ஓவியம் வரைவதை ஒரு பொழுது போக்காக கொண்டிருந்தாலும் பணி ஓய்வுக்கு  (1893 )முன்னரே இவரது ஓவியங்கள் பேசப்பட்டன .

இவர் வறுமையில் வாடியதாக கேள்விப்படுகிறோம்.  இவருக்கு ஒவியம் மீதிருந்த  காதல் இவருக்கு பாராட்டை பெற்று தந்தது. அதிலும் காட்டு ஓவியங்கள்  இவரை போலவே எதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் இருந்தன.

இவர் காலத்து ஓவியர்கள் ( Bouguereau and Gerome) இவரை ஏளனமாகவே பார்த்தார்கள்.  1908 ல் பிகாஸோ இவரை அரை மனதாக பாராட்டியதாக அறிகிறோம்.

இவரின் இறுதி ஓவியம் "கனவு" (Dream 1910) இது நியூயார்க் மியூசியத்தில் (MOMA) உள்ளதாக அறிகிறோம்.

இறப்பிற்கு பின் ஏழையின் கல்லறையில் இவரது உடல் புதைக்கப்பட்டது
அதன் பிறகே இவரின் ஓவியத்தின் நேர்மை பரவலாக பாராட்டு பெற்று பிரபலமானது ஒரு சோகமான நிகழ்வே !




ரூஸோ ஹென்றி (self portrait)


4 comments:

  1. அனைத்தும் மிகவும் அருமை...

    ரூசோ ஹென்றி பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  2. ரூசோ ஹென்றி ஓவியங்கள் எல்லாம் அழகு.
    புதிய தகவல் அறிந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  3. தெரியாத தகவலை தங்கள் பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டேன்! பகிர்ந்துக்கொண்ட ரூசோ அவர்களின் ஓவியங்களும் அழகாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. நண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் ....நேரம் இருந்தால் வந்து பாருங்கள் .....
    http://blogintamil.blogspot.com/2013/01/2518.html

    ReplyDelete

Popular Posts