Saturday, August 17, 2013

மெட்டாமோர்பிக் ஓவியர் ஓகம்போ


Octavio Ocampo

அக்டோவியோ ஓகம்போ,  ஷெலயா { குவானவாடோ (மெக்ஸிகோ)[ Celaya, Guanajuato ]  } என்ற ஊரில் பிறந்தவர் (1943).

இவர் மெக்ஸிகோ  நுண்கலை கல்வி நிறுவனத்திலும் பின் சான்ப்ரான்ஸிஸ்கோ கலை கல்லூரியிலும் பயின்றவர். 1972 முதல் இவரின் ஓவியங்களை காட்சிப் படுத்தி வருகிறார்.

ஏராளமான மெக்ஸிகன் மற்றும் அமெரிக்க படங்களுக்கு பின்புல இயற்கை காட்சிகளை யும், அதே போல பல நாடகங்களுக்கும் டிசைன்களை வரைந்து கொடுத்து இருக்கிறார்.

இவர் ஒரு நடிகராகவும், நடனம் ஆடுபவராகவும் அறியப்படுகிறார், 1976க்கு பின் முழுக்க முழுக்க தமது கவனத்தை ஓவியத்திலும், சிற்பக்கலையிலும் செலுத்தினார்.

இவர் பாணியில் வரைந்திருந்த  அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் உருவ ஓவியத்தை  மெக்ஸிகோ அரசாங்கத்தின் சார்பாக அவருக்கு பரிசளிக்கப்பட்டது.

இவரது ஓவியங்கள் மெட்டாமோர்பிக் (உருமாற்றம் சார்ந்த வகை) என வகைப்படுத்தப் படுகிறது.  இந்த வகையில் வரையப்பட்ட ஓவியத்தின் முதல் பார்வையில் ஒரு ஓவியமாகவும் கூர்ந்து கவனிக்கும் போது அது பல்வகை உருவங்கள்,படங்களை,பிரதிபிம்பங்களை ஒருங்கிணைத்து வரையப்பட்டது என புலப்படும்.

மொத்ததில் ஒரு ஓவியம் என்பது பல ஓவியங்கள் அசைவுகள் இணைந்த தொகுப்பாக இருக்கும்.

He works primarily in the metamorphic style - using a technique of superimposing and juxtaposing realistic and figurative details within the images that he creates.



இந்த ஓவியத்தில் ஒரு மனிதன் தெரிகிறான் உற்று பார்க்கும் போது, இந்த உருவத்தில் காடுகள், மலைப்பாதை, பாதையில் போகும் கார்கள், குப்புறப்படுத்து ரசிக்கும் மனிதன்,  நிலங்கள் தெரிகின்றது.





ஜிம்மிகார்டர் ஓவியம் அமெரிக்க கட்டிடங்கள், தொழிற்சாலைகள், கப்பல்கள், வாகனங்கள்,மலைகளின் தொகுப்பு


பூச்சாடி பூ ஒரு அழகிய பெண்ணாக


இந்த வீரர் ஓவியத்தில் பல உருவங்களை பார்க்கலாம் இரண்டு குதிரை வீரர்கள், கேடயம், வாள் மற்றும் உறை, குதிரைகள்,வானத்தை பார்க்கும் ஒரு பெண்முகம் ஒரு வீடாக, இருகைகளில் வாளியை ஏந்தி நிற்கும் பெண், முகமூடி அணிந்த வீரன், விண்ணில் பறக்கும் பெண் உருவம், மனித மண்டை ஓடு, காற்றாலை,தடி ஊன்றி செல்லும் மனிதர்கள்.. இன்னும்...


மக்களும் ரோஜா மலர்களும்,கோட்டையும்....மாதாவாக


நாற்காலி, பூணை, கேரட்டுகளின் மேல் படுத்துறங்கும் முயல், மனிதமுகங்கள்,மலைகள் இவை எல்லாம் இணைந்து மோனாலிஸா ( ஒரிஜினல் ஓவியத்தை பார்த்தால் இன்னும் பல தென்படலாம் ! )


கொடி,மலர், வண்ணத்துப்பூச்சி ஒரு அழகிய பெண்ணாக (கவிதையே தேவையில்லை !)



கடல் = காதலர்கள், இரு கைகளை தூக்கி ஒய்யாரமாக பாடிச் செல்லும் பெண் இலை உதிர்ந்த மரமாக, வானத்தில் காதலர்கள்,  வேர்களில் முகங்கள்,


சங்குகள், கடற்கன்னி, கடற்கன்னியின் தந்தை, மீன்கள் = நிர்வாண உருவங்கள், மரம்


குதிரைகளும், பறவைகளும் அழகி உருவமாய்...


ஒரு முகம்,  பல கதைகள்  ( புத்தர், இந்தியாவை நினைவுபடுத்துகிறது)





6 comments:

  1. அருமையான கற்பனை
    தெளிவான கோடுகள்
    ஒன்றாக கண்டால் ஒரு உருவம்
    பொறுமையாக கவனித்தால் பல உருவங்கள்.
    பாராட்டுக்கள் ஓவியருக்கும் அதை காட்சிபடுத்திய உங்களுக்கும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பட்டாபிராமன் சார்

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க வேல்முருகன்

      Delete
  3. தகவலுக்கு நன்றிங்க தனபாலன்.

    ReplyDelete
  4. அடிப்படையில் நானும் ஒரு ஓவியந்தான், ஆகையால் இதை பார்க்கும்போது மகிழ்கிறது மனது. மீண்டும் ஓவிய ஆசை மேல் எழுகிறது..... நன்றி !

    ReplyDelete

Popular Posts