Maurits Cornelis Escher [1898 – 1972]
டச்சு எழுத்துரு ஓவியர் எம்.சி. எஷர் (மாரிட்ஸ் குர்ன்லிஸ் எஷர்) தனக்கென முத்திரை பதித்தவர். இவரது ஓவியங்களை மீசோ டிண்ட், அச்சு கலை பாணி(லித்தோ), கணித வரைகலை, முப்பரிமாண வியூகம்,நிழலுறுக்கள்... என பல வகைப்பாட்டியலில் சேர்க்கிறார்கள். (மேலும் மர வேலைப்பாடும் அறிந்த ஜீனியஸ்) எனக்கு இவரது ஓவியங்களை பார்க்கையில் நம்மூர் (தமிழக) ஓவியர் ராமு அவர்களின் ஓவியங்கள் மனக்கண் முன் விரிந்தன.
ஃப்ரிஸ்லாந்தில் (Friesland) சிவில் இன்ஜினியரின் மகனாக பிறந்த தாலோ என்னவோ இவரக்கு முப்பரிமாண ஓவியங்கள் எளிதாக கைகூடியது. இவர் கற்பனைப் பார்வையில் பட்ட ஒவ்வொன்றும் இவரின் தூரிகையில் முப்பரிமாணங்களாக உயிர் உருவம் பெற்றன.
அரசியல் ஈடுபாடு மிக்க இவர், 1937ல் பெல்ஜியதிற்கு குடிபெயர்ந்தார் அங்கிருந்து தொடங்குகிறது (லைப் அண்ட் ஸ்ட்ரீட் )இவரது ஓவிய உலகம். இரண்டாம் உலப்போர் இவரை நெதர்லாந்துக்கு தள்ளியது.
கருப்பு வெள்ளையில் வரைந்த ஓவியங்கள் அதன் பரிமாணம், வியூகம் நம்மை ஒரு புது உலகத்திற்கு அழைத்து செல்கிறது. "தன்னை தானே வரைந்து கொள்ளும் கைகள் (drawing hands), வானமும் தண்ணீரும் (sky and water), ஏற்றமும் இறக்கமும் ( Ascending and Descending)
இன்னும் எண்ணற்ற ஓவியங்கள் நம் நெஞ்சத்தை அள்ளுகின்றன. இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று அவர் இடது கை பழக்கம் உள்ளவர்.
1958 ல் Regular Division of the Plane என்ற ஒரு புத்தகம் வெளியிட்டார். இந்த புத்தகம் கணிதம் சார்ந்த டிசைன்களையும், வரைகலை(DRAFTS) நுணுக்கங்களை, மர உருவக் கலைகளை விளக்கியது.
ஹாகுவே அருங்காட்சியகத்தில்(Hague Museum) இவரது ஓவியங்கள் காட்சிக்குள்ளன இன்னும்..,the National Gallery of Art (Washington, DC); the National Gallery of Canada (Ottawa); the Israel Museum (Jerusalem); Huis ten Bosch (Nagasaki, Japan); and the Boston Public Library
Drawing Hands, lithograph (1948)
House of Stairs, lithograph (1951)
யம்மாடி...! இதெல்லாம் எங்கே உங்களுக்கு கிடைக்கிறதோ...?
ReplyDeleteநன்றிகள் பல...
வாழ்த்துக்கள்...
உடன் கருத்திட்டு ஊக்கப்படுத்திய உங்களுக்கு நன்றி D:D
Deleteஅருமை.. அருமை.. அருமை..
ReplyDeleteபொறுமை தந்த பரிசு
ReplyDeleteஓவியங்கள் அருமை
பாராட்டுக்கள்
நன்றி.
Yes, his drawings remind us of Ramu of Kumudam/kalkandu, but certainly something more. Congrats for your efforts.
ReplyDelete@கோவை ஆவி,Pattabi Raman,Chellappa Yagyaswamy
ReplyDeleteகருத்துக்களை வழங்கிய அனைவருக்கும் நன்றி!