நேர்த்தியான, இந்த ஓவியத்தில் என்னை கவர்ந்தது ஒரு குதிரை அதன் தலையில் இருந்து நீண்ட வால் போன்ற பகுதி இருக்கிறது. இந்த விலங்கு காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம். எனக்கு இதே குதிரை உருவத்தை அவதார் ஆங்கிலப் படத்தில் கிராபிக்ஸில் கொண்டு கொண்டுவந்திருப்பது போல் தோன்றியது (உங்களுக்கு எப்படி தெரிகிறது ?)
இந்த குகை ஓவியத்தின் வரலாறு இதோ :
நான்கு சிறுவர்கள் தாங்கள் வசித்த காட்டுப்பகுதியில் காலார நடந்து சென்ற போது கண்டறியப்பட்டது இந்த குகை ஓவியங்கள் (Lascauz cave ).
இந்த குகை ஓவியங்கள் பிரான்ஸின் டார்டோனே (Dordogne) என்ற இடத்தில் அறியப்பட்ட ஆண்டு 1940. இந்த ஓவியங்கள் சூமார் 17000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இரண்டாம் உலப்போர் சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் வெளி உலகத்திற்கு எட்டு ஆண்டுகள் கழித்து தெரிந்தது. 1963 வரையிலும் இதை பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்ததாம். வரலாற்றுக்கு முந்திய காலத்தின்(prehistoric) உலகின் சிறந்த ஓவியமாக இதை கருதுகிறார்கள்,ஃபிரான்ஸில்.
































