Monday, August 20, 2012

[Findings] நவீன பாவனை ஓவியர் பாஸ்குவிட்


















ஜேன் மைக்கேல் பாஸ்குவிட் ஒரு "பாப் ஐகான்" சுவர் சித்திரக்காரர், இசை கலைஞர், நவீன பாவனை ஓவியர்,கலாச்சார முகம் கொண்டவர்...இப்படி பன்முகம் கொண்டவர்.

சிறு வயதில் இவர் வித்தியாசமானவராக இருந்தார். நான்கு வயதில் ஒரே நேரத்தில் ஒன்றை படித்தபடியே இன்னொன்றை எழுதவும் செய்தான். பதினோரு வயதில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிய மொழி புலமை பெற்றிருந்தான்.  15 வயதில் வீட்டை விட்டு ஓடி வாஷிங்டன் ஸ்கொயர் சதுக்கத்தில் சுற்றி திரிந்தான்.  போலீஸ் கைது செய்து வீட்டில் சேர்த்தது. பத்தாவது கிரேடிற்கு மேல் படிக்கவில்லை.  அவனது தந்தை உதைத்து வீட்டை விட்டு துரத்தி விட்டார். வலியோடு நண்பர்களின் உதவியோடு வாழ்ந்தான்.  டி-சர்ட்களையும் கையால் தயாரித்த போஸ்ட் கார்டுகளையும் விற்றான்.

1970-ல் பாஸ்குவிட் ஸ்ப்ரே முறையில் சுவர் ஓவியங்களை மன்ஹட்டனில் வரைந்து தள்ளினார்.  அப்போது தான் நாலுபேருக்கு தெரிந்தவரானார்.  1979-ல் டி.வி ஷோகளில் தலைகாட்டினார். "க்ரே" எனும் ராக் பேண்டில் இருந்தார். இப்படி நியூயார்கில் மெல்ல மெல்ல புகழ்பெற்றார்.   இந்த கால கட்டத்தில் ராப்சு [Rapture] எனும் வீடியோ ஆல்பத்தில் தோன்றினார்.

1982-ல் மடோனா, டேவிட் போவி (இசையமைப்பாளர்),ஆன்டிவார்ஹோல் (ஓவியர்) இவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. ஸ்பாட் பெயின்டிங்கில் அதாவது பொது இடங்களில் வரைந்து தள்ளினார். இவரின் ஒரு ஓவியம் அப்போது ஆயிரம் டாலர் விலை போனது.  1986-ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கவர் ஸ்டோரி - அட்டையில் வரும் அளவு புகழ் பெற்றார்.

வெற்றியடைந்த ஒரு ஓவியர் வாழ்வில் ஹெராயின் எனும் அரக்கன் நுழைந்தது. போதைக்கு அடிமையாகி, அதிக அளவு ஹெராயின் போதையினால் 1988-ல் மரணித்தார்.

இவரின் வாழ்க்கை படமாக்கப்பட்டது. இவரின் உழைப்பு மற்றும் வாழ்க்கை புத்தகங்கள், கவிதைகள் மற்றும் கதை சொல்லும் ஓவியங்களில் வாழ்கிறது.


8 comments:

  1. வித்தியாசமாக இருக்கு...

    தகவல்கள் அருமை..

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  2. வித்தியாசமான படங்களும்! புதிய தகவல்களும்! பகிர்வுக்கு நன்றி!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
    http://thalirssb.blogspot.in/2012/08/5.html

    ReplyDelete
  3. அருமை, என் ஓவிய தாகத்திற்கு தங்கள் தளம் நல்ல விருந்தாக அமைகிறது....

    தொடருங்கள்......

    ReplyDelete
  4. அருமையான பதிவு.

    ஜேன் மைக்கேல் பாஸ்குவிட் பற்றி அறிந்துக் கொண்டேன். பல ஒவியகாட்சிகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

    தொடருங்கள்.

    ReplyDelete
  5. நல்ல பதிவு. நீண்ட காலத்திற்குப் பின் வெளியிட்டிருக்கிறீர்கள். மது என்னும் அரக்கன் யாரைத்தான் விட்டு வைத்தது. இவை யாவுமே நான் இதுவரை அறிந்திராத புதிய தகவல்கள். ஓவியத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய வலைப்பதிவு இது எனலாம். இன்னும் எழுதுங்கள். சந்திப்போம் உள்ளமே. இன்று என் தளத்தில்:
    வேலைக்கு போறேன்!

    ReplyDelete
  6. அருமை சார் ,
    நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. //திண்டுக்கல் தனபாலன்August 21, 2012 1:40 AM//

      நன்றி தனபாலன் சார். தங்கள் ஆதரவு எனக்கு ஊக்கம் அளிக்கிறது.

      //s suresh August 21, 2012 2:58 AM//
      நன்றி நண்பரே...

      //இரவின் புன்னகைAugust 24, 2012 2:39 AM//

      தொடர்கிறேன் நண்பரே :)

      //Rasan August 24, 2012 11:32 PM//

      நன்றி தோழி.

      //சிகரம் பாரதிAugust 26, 2012 6:16 AM//

      மிக்க நன்றி நண்பரே அப்பப்ப உங்க கருத்துகளை சொல்லுங்க.

      //sakthi September 1, 2012 5:01 AM//

      வாங்க சக்தி...நன்றி






      Delete
  7. நானும் ஒரு அரைகுறை ஓவியன் தான்.
    படங்கள் அருமை. பிசிறில்லாமல் அருமையான கோடுகள், வண்ணங்கள், shades
    அற்புதம்
    தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete

Popular Posts