சில புதிய ஓவியங்களை இந்த பதிவில் பகிர்கிறேன்.
மேலே உள்ளது பெல்காமை சேர்ந்த ஓவியர் ஷிரிஸ் தேஷ்பாண்டேவின் ஓவியம் இந்த ஓவியத்தில் டெல்லியின் பழைய தெரு வரையப்பட்டு உள்ளது இதில் வெயில் மற்றும் நிழல் அருமையாக காட்டப் பட்டுள்ளது. ( சைக்கிள் , சைக்கிள் ரிக்ஸா, மின் கம்பி).
கீழே உள்ளது அவரின் இன்னொரு ஓவியம்
சீன ஓவியர் ஷீ தோ வின் ஓவியம் மேலே உள்ளது. இது வாட்டர் கலரில் வரையப் பட்டது. வயதின் சுருக்கங்கள் , தலை மீது இருக்கும் மூங்கில் தொப்பியில் இருந்து விழும் நிழல் தத்ரூபமாக இருக்கிறது. ஓவியரை பற்றிய குறிப்புகள் தெரியவில்லை.
இது பிரேஸில் ஓவியர் அந்தேரி மராணி வரைந்த ஓவியம். இதற்கு " காஃபியின் வாழ்க்கை " என தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வயதான பெண்மணி காபி தோட்டத்தில் வேலை செய்கிறார். இது அவரின் வாழ்க்கையும் ஆகும் என்பதே இதன் பொருள். காகிதத்தில் பென்சிலால் வரையப்பட்ட இந்த ஓவியம் ஒரு புகைப்படம் போல தெரிகிறது ஓவியரின் உழைப்பு இதில் தெரிகிறது. இது உங்களையும் கவரும் என நினைக்கிறேன்.
அதே போல கருப்பு வெள்ளையின் அழகை வெளிப்படுத்தும் ஓவியம் இது. தாரகையின் கண்கள் பார்பவரை நிச்சயம் கவரக் கூடியது.
ஓவியரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. தூரிகையின் வீச்சை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நாட்டிய மங்கையின் நளினம் நம் மனதை கவர்கிறது.
artist Sir John Everett Millais 1829-1896
ஓவியர் சர் ஜான் எவரெட் மெலே, அருமையான இவரின் ஓவியங்கள் கிடைத்தால் தகவல்களுடன் பகிர்கிறேன்.





























