Showing posts with label வான்கா. Show all posts
Showing posts with label வான்கா. Show all posts

Tuesday, May 14, 2013

[ Findings ]துயரத்துடன் முடிந்த ஓவியரின் வாழ்க்கை ( வான்கா) - Part 2

தொடர்புடைய பதிவு :   பகுதி 1

வான்காவின் ஓவியங்கள் அவரின் மறைவுக்கு பின் அதிகம் பேசப்படுவதற்கும், அதிக விலை போவதற்கும் காரணம் ஓவிய நுணுக்கங்களை விடவும் அதில் உள்ள உண்மை தன்மையும் உணர்ச்சி வெளிப்பாடும் என்று சொல்வது மிகை இல்லை என்று நினைக்கிறேன்.

இவரின் ஓவியங்களின் தூரிகையின் வீச்சு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. போர்ட்ராய்ட் எனப்படும் வகையில் தனது சுய ஓவியத்தை பல வரைந்துள்ளார் அதில் ஒன்று காது அறுபட்ட நிலையில் தன்னை தானே வரைந்து கொண்டது. இன்னொரு ஓவியம் தாடி இல்லாமல் இருக்கும் போது வரையப்பட்டது. இந்த ஓவியம் மட்டும் 1998 நவம்பரில் $71.5 million (டாலர்) விலை போனது அதுவே டிசம்பர் 2011 ல் $98.4 million டாலர் என்பது வியப்பான விசயம்.

இவர் ஓவியனாவதற்கு ஒரு காரணம் இவரின் சகோதரர் தியோ (ஆர்ட் டீலர்), இந்த தொழிலில் பிரகாசிக்கலாம் என்ற அவரின் எண்ணம். இன்னொரு காரணம் காதலாக இருக்கலாம் ஆனால் அந்த காதலே அவரின் உடல் நலக்கேட்டிற்கும் காரணமாக போய்விட்டது வருத்தப்படவைக்கும் தகவல். சகோதரரின் மனைவி ஜோஹனா இவரின் ஓவியங்களுக்கு ஊக்கம் அளித்தவர். அவரின் மறைவிற்கு பிறகு 1901 ல் 71 ஓவியங்களை காட்சிப்படுத்தினார்.

ஓவியங்களில் , 860 ஆயில் பெயிண்டிங்குகள், 1300 வாட்டர் கலர் பெயிண்டிங்குகள் மற்றும் ஸ்கெட்சுகள். இன்னும் காணாமலும் அழிந்தும் போயிருக்கலாம். அநேக பெயிண்டிங்குகளின் விலைகள் அதிகம் பேசப்படுகின்றன.

வருமையின் காரணமாக 15 வயதில் படிப்பை துறந்து வேலை தேடினார். தாய்மொழியாம் டச்சை தவிர ப்ரெஞ்ச், ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் நன்றாக அறிந்திருந்தார்.

மஞ்சள் வீடு அவர் வசித்த வீடு அந்த ஓவியம் நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தன்னை “Christ of the Coal Mines” என்று அழைத்துக்கொண்டார்.







   

Friday, May 10, 2013

[ Findings ]துயரத்துடன் முடிந்த ஓவியரின் வாழ்க்கை ( வான்கா)

 

வின்செண்ட் வான்கா நெதர்லாந்தில் பிறந்தவர். கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் எழுத்தராக (clerk) பணிபுரிந்தார்.  சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இன்னும் சில காலம் சமய தொண்டு (preacher) புரிந்தார். இவர் தமது 30 ஆவது வயதிற்கு பின்னாலே ஓவியம் வரைய ஆரம்பித்தார்,  என்பது கவனிக்கத்தக்கது. 1886 ல் பாரிசுக்கு புலம் பெயர்ந்த பின்னர்  ஓவிய புதுமையாளர்கள் அல்லது உணர்வுபதிவுவாத ஓவியர்களுடன் இவருக்கு ஏற்பட்ட தொடர்ப்பு இவரின் ஓவியங்களை மெருகேற்றியது என்று சொல்லலாம்.  ஜப்பானிய ஓவியங்களின் தாக்கம் இவரிடம் இருந்தது.

இவரின் முதல் ஓவியமான  உருளைகிழங்கு உண்போர்  ஏழை மக்களுடன் பழகியதன் வெளிப்பாடு.

நூற்றுக்கணக்கான ஓவியங்கள் வரைந்த இவரால் ஒரே ஒரு ஓவியம் மட்டுமே விற்கமுடிந்தது நெருடலான விசயம்.  அவரின் மறைவுக்கு பின்னரே உலக அளவில் மிகச்சிறந்த ஓவியங்களாக இவரது ஓவியங்கள் கணிக்கப்பட்டன.

இறுதி நாட்களில் இவர் மனநோயால் பீடிக்கப்பட்டார். தன் காதுமடல்களை அறுத்துக் கொண்டார். இறுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இறுதியில் 37 ஆம் வயதில் உயிர் நீத்தார்.  இன்றைக்கு அவரது ஓவியங்கள் விலை மதிக்க முடியாதவையாக கருதப்படுகிறது.

"The sadness will last forever." துயரம் என்றும் தொடரும் என்பது இவரின் இறுதி வாக்கியம்.

அவரின் திருவாசகம் :
” I cannot help that my pictures do not sell. Nevertheless the
time will come when people will see that they are worth more
than the price of the paints and my own living”


இவரின் சில படைப்புக்கள் :


மஞ்சள் வீடு
 ஓய்வு அறை Bedroom in Arles, 1888


The Sower, 1888


Starry Night Over the Rhone, (1888)





இன்னும் சில ஓவியங்கள்  மற்றும் தகவல்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்..


Popular Posts