Showing posts with label Picasso Paintings. Show all posts
Showing posts with label Picasso Paintings. Show all posts

Saturday, May 4, 2013

பிகாஸோவின் குவர்னிகா - [Findings]


(Guernica) குவர்னிகா எனும் இந்த ஓவியம் 20 ஆம் நூற்றாண்டின் ஒரு புரட்சி படைப்பு என புகழப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற இந்த ஓவியத்தை 1937 ல் வரைந்தார். கேன்வாஸில் வரையப்பட்ட இந்த ஓவியம் (ஆயில் பெயிண்டிங்) சுமார் 11 அடி உயரமும் 25 அடி நீளமும் கொண்டது. (மேல் பகுதிகளை ஏணி இல்லாமல் வரைய முடியாது.)  பிகாஸோ பாரிஸ் உலக விழாவில் (செப்.1938) இதை காட்சிப்படுத்தினார்.

இவ்வோவியம் சிம்பாலிசம் என்ற வகைப்பட்டது. போருக்கு எதிரான கொள்கையை சித்தரிக்கிறது. உலகப்போரினால் குவர்னிகா மக்கள் பட்ட துன்பதை, போரின் கொடுமையை,அடக்குமுறையை சாடுகிறது.

ஸ்பெயின் தேசம் நாஜிக்களால்(ஜெர்மனி) விமான குண்டுதாக்குதலுக்குள்ள வரலாற்றை சொல்லுகிறது இவ் ஓவியம்.


பின்னாளில் ஒரு ஜெர்மன் அதிகாரி ”நீங்கள் தான் இதை வரைந்ததா? ”என கேட்டார். அதற்கு பிகாஸோ சொன்ன பதில் “இல்லை..இதை நீங்கள்தான் உருவாக்கினீர்கள்”.




மேலோட்டமாக பார்த்தால் இவ்வோவியத்தின் கூறுகளை புரிந்து கொள்ள முடியாது.

முதலில் நமக்கு தெரிவது கூரையில் எரியும் மின்விளக்கு. இது குண்டு தாக்குதலை சொல்கிறது. ஏற்பட்ட விளைவுகளை காணச் சொல்கிறது பெரிய கண் உருவம். ஞான கண்ணை திறக்க சொல்கிறது. மின் விளக்கின் பின்னே இருளில் சிறகு ஒடிக்கப்பட்ட பறவை.


குரல் வலை நசுக்கப்பட்டு கதறும் குதிரை. அதன் கதறலை வெளித்தள்ளும் நாக்குகள் உணர்த்துகிறது. அந்த குதிரையின் கால்களும் உடைக்கப்பட்டு உள்ளது. எலும்புகளின் சிதறல்கள்..

இறந்த குழந்தையை பதறும் கைகளில் ஏந்தி வானத்தை நோக்கி கதறும் தாய்.



எருது ஸ்பெயினின் கலாச்சார குறியீடு. அதன் முகத்தில் மனிதனின் உருவமும் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது. மாட்டின் வால் தீயின் நாக்குகள்... கொழுந்து விட்டு எரிவதாக காட்டப்பட்டுள்ளது.

தீபற்றி எரியும் வீட்டில் (பின்புல ஜன்னல்) தீ நாக்குகளில் சிக்கிகொண்டு காப்பாற்ற கதறும் பெண். (இவ்வுருவம் பெண்ணாகவும் தெரிகிறது ஆணாகவும் தெரிகிறது)

வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சிப்பாய். கைகளில் உடைந்த வாள். அந்த கையின் பின்புலத்தில் மலர் சமாதானத்தின் குறியீடு. போர் தேவையில்லை என்பதை உணர்த்துகிறது. காலில் நசுக்கப்படும் தலை கவசம்.



திறந்த கதவின் வழியே பறந்து வரும் பெண். கைகளில் அணைத்து பிடித்த விளக்கு போர் அற்ற சூழல் வேண்டும் என்பதன் குறியீடு.




PABLO PICASSO [ 1881–1973 ]


பாப்லோ பிகாஸோ ஸ்பெயின் தேசத்தில் மெலேகா (malaga)வில் பிறந்தவர். பாரிஸில் வாழ்ந்தவர் அதற்கு முன் இளவயதில் பார்ஸிலோனாவில் வளர்ந்தவர். முப்பரிமாண ஓவியங்களின் முன்னோடி. 92 ஆவது வயதுவரை வாழ்ந்தார்.


Monday, June 25, 2012

[ Findings ] பிகாசோ ஓவியமும், பாவனைகளும்...


பிகாசோ ஓவியம் : தலைப்பு : ஓவியரும் மாடலும் : ஆண்டு :1926 
வகை ஆயில் பெயின்ட் : தளம் : கேன்வாஸ் மார்டன் ஆர்ட் 


இந்த வகை ஓவியத்தில் பார்பவரின் மனதில் ஏற்படும் பிம்பங்கள் உருவங்கள் வரைந்த ஓவியரின் மனதிலும் இருக்குமென கூற முடியாது.  அவர் அவர் கண்ணோட்டத்திற்கேப்ப மாறிக்கொண்டே இருக்கும்.  மேலும் ஒரு நாள் நீங்கள் யோசித்தது மறுநாள் பார்த்தால் மாறி இருக்கும். ஏனென்றால் அவர் வரையும் போதே மேன் மேலும் உருவங்களை கோடுகளாக்கி வரைந்துள்ளார்.  மேலும் நிறங்கள் நிழல்கள் நம் சிந்தனையை உருமாற்றிக்கொண்டே இருக்கும்.  இந்த ஓவியத்திற்கு தலைப்பு " ஓவியரும் மாடலும் " என்பதால் அது சம்பந்தப்பட்ட என்ன ஓட்டத்திற்கேற்ப உங்களுக்கு பிம்பங்கள் தோன்றும்.



பிகாசோ ஓவியம் : தலைப்பு : (லயிப்பு )அசைவற்ற நிலைப்பாடு : ஆண்டு :1925 
வகை ஆயில் பெயின்ட் தளம் : கேன்வாஸ் மார்டன் ஆர்ட் 

இந்த மார்டன் ஆர்டை கியூபிசம் என்று சொல்லுகிறார்கள். இதில் நமக்கு பரிசயம் உள்ள பொருட்களை பார்கிறோம் அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை.   இரும்பு பட்டரையில் அசைவற்றிருக்கும் இரும்பு பிளாக்கை கையில் பிடித்திருப்பது போல உள்ளது.  இசைகருவி அதனால் ஏற்படும் மெய்மறந்த நிலை ;  புத்தக வாசிப்பு அதனால் ஒரு அசைவற்ற நிலை ; உறக்கம் : ஆழ்நிலை ; இப்படி பல பரிமாணங்களை நமக்கு அளிக்கிறது.


பிகாசோ ஓவியம் : தலைப்பு : மஞ்சள் தொப்பி அணிந்த பெண்மணி : ஆண்டு :1925

போர்ட்ராய்ட் ஓவியம் இது Expressionism வகை அசைவுகள் நெளிவுகள் என சொல்லலாம்.  ஒரு பெண்மணி மஞ்சள் தொப்பி அணிந்துள்ளார் சிந்தனை வயப்பட்ட நிலை, கவலை;  பரிதவிப்பு;  அழுகை இப்படி பல நிலைகளை சித்தரிக்கிறது. முக்கியமாக கண்களின் எக்ஸ்ப்ரசன் கவனிக்க வேண்டியவை.


பிகாசோ ஓவியம் : பிளாஸ்டர் ஹெட் மார்டர்ன் ஆர்டின் சரலிஸம் வகை [1925]

இயந்திரத்தனமான மனித வாழ்க்கை என்று சொல்லலாம். மனிதன் வெளிப்பார்வைக்கு ஒன்றாகவும் உள்ளுக்குள் பல வாகவும் இருக்கிறான் அதைக் குறிக்க பிளாஸ்டர் ஹெட், இயந்திர கைகள்; கால்கள்; வீடு ; அலுவலகம் ; செழிப்பிழந்த வாழ்வை குறிக்க வாடிய செடி ; படிப்பு ; வேலை ; மொத்ததில் அசைவற்றிருக்கும் ஒரு சட்டம் என பல பரிமாணங்கள்.


பிகாசோ ஓவியம் : தலைப்பு : ஈசலும் வடிவமைப்பும் : ஆண்டு :1926

ஓவியர்கள் வரைய பயன்படுத்தும் போர்டு ஈசல் ஒரு அறையில் கிடத்தப்பட்டுள்ளது பலவித கேன்வாஸ்கள் அதன் மீது போர்த்திவைக்கப்பட்டுள்ளன. அசையாத ஜாடியை போல உயிரோட்டமான ஓவியம் உறங்குகிறது என பொருள் கொள்ளலாம்.


பிகாசோ ஓவியம் : தலைப்பு : கோடீஸ்வரரின் பணி இடம் : ஆண்டு :1926

ஒரு பணக்கார சீமானின் பணியிடம் எப்படி இருக்கும் ?  பல அழங்காரங்களுடன் ; பணத்தின் செழுமை பளிச்சிடும் பொருட்கள் ; பிரம்மாண்டம் ; வித்தியாசமான வடிவமைப்புகள், நவ நாகரீகம் ....இப்படி

Popular Posts