Saturday, March 17, 2018

சல்வேடர் டாலி - Part 2

சல்வேடர் டாலி 84 வயது வரை வாழ்ந்த ஸ்பெயின் ஓவியர். இவரது ஓவியங்கள் இயற்கை காட்சிகளாகவும் அதே சமயம் சர்ரியலிச வகை தொகுப்புகளும் உலக புகழ் பெற்றவை.

விலங்குகள் இயற்கை ஓவியத்தில் தீட்டுவதை இவர் வித்தியாசமாக சர்ரியலிச வகைப் பட்டியலில் சேர்த்தார்.

சிறியவர் முதல் பெரியவர் வரை என்றும் பிரமித்து பார்த்து ரசிக்கும் விலங்கு யானை, இவரது ஓவியங்களில் ஒட்டகசிவிங்கி கால்களுடன் வித்தியாசமாக அணி வகுக்கும்.

ஓவியங்கள் பல இருப்பினும் யானைகள் பவனி வந்த 3 ஓவியங்களை உதாரணம் காட்டலாம் ஓவிய தலைப்புகள்

1. Les Elephants painting


2. Swans Reflecting Elephants


3. Dreams Caused by the Flight of a Bee around a Pomegranate


கிரேக்க மற்றும் எகிப்திய கட்டிட சிறப்புமிக்க நினைவுத்தூண்கள் அதன் உச்சியிலே ஒரு பிரமிட் இதை ஆங்கிலத்தில் அபிலிஸ்க் என்பர்.
முதுகில் இந்த தூண்கள் சுமந்து செல்லும்
குச்சி கால் யானைகள் "டாலியானைகள்" என்றே சிறப்பு பெற்றன. அரசனின் கோலோச்சிய பெருமை பேசும் தூண்கள் அந்த நாட்டின் பெருமை பேசினாலும் அதன் பின்னால் நசுக்கப் பட்ட, வஞ்சிக்கப் பட்ட ஏழை மக்களின் வாழ்வியலும் சேர்ந்தே இருப்பதை பட்ட வர்தனமாக சொல்கின்றன.

அன்னப் பறவையின் நீண்ட நிழல்கள் கஜமுகன்களாக தோற்றமளிக்கின்றன. அழகின் பின்னே மறைந்திருக்கும் கொடூர நிகழ்வுகளோ? பொய்கள் தோரணம் சூட்டி அழகில் மறைந்தாலும்

உண்மைகள் ஒரு நாள் வெளிவந்து எக்கால சிரிப்பு காட்டும் உலக நியதி.
கடைசியாக சொன்ன ஓவியம் டாலி தன் மனைவியை(காலா) கனவில் கண்ட காட்சியாக பிரதிபளிக்கிறது. நிர்வாணமாக இருக்கும் அவளை கொடூர புலிகள் துரத்த அந்த விலங்கினை விழுங்க முயற்சிக்கும்
மாதுளையில் முத்துக்களில் தோன்றிய
சுறாக்கள் பின்னணியில் கடலின் மேல் ஓடிவரும் கால் நீண்ட வெள்ளை யானை.

பெண்,துப்பாக்கி,புலி கீழே மாதுளையை சூழும் வண்டு இவைகள் சொல்லும் கருத்து? பெண் என்பவள் காமபசி புலிகளால் துரத்தப் படுபவள் ஏன்?. பூக்களை தேடி ஓடும் வண்டுகள் கனிகளை தேடி ஓடினால் ? அதிகார வர்கம் செய்யும் அட்டகாசங்களை இவ்வுலகம் பனியில் உறைந்த வெள்ளையானை போல பார்த்துக் கொண்டிருப்பதா ஜன நாயகம் ?

Tuesday, February 13, 2018

டாலியின் உருகும் கடிகாரங்கள்

20 ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியர்களில் "சர்ரியலிசம்" என்று சொல்லக்கூடிய கனவின் கற்பனையின் காட்சி வடிவங்களை தமக்கு என்று தனி பாணியில் தீட்டியவர் ஓவியர் "சல்வேடர் டாலி" இவர் ஓவியம் மட்டும் இல்லாது பண்முக தன்மை மிக்கவர். (Sculptor, Filmmaker, Printmaker, and Performance Artist)

இவரின் ஓவியங்களில் ஒன்றை இப்போது பார்போம். தலைப்பு The Persistence of Memory (1931) இதை தமிழில் இப்படிச் சொல்வோம் "ஞாபகத் தடம்" தமது 27 வது வயதில் இதை தீட்டியிருக்கிறார்.
ஒரு ஓவியம் சொல்லும் கருத்து இதுதான் என்பதை ஓவியர் சொன்னாலும் அதற்கு மேலாக பார்வையாளனின் கருத்துக்கள் வேறுபடும் ரசிப்பைப் பொறுத்து.



இந்த ஓவியம் எதை பற்றிப் பேசுகிறது என்று பார்த்தோமானால் கனவை , காலத்தை பற்றி என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

தியரிஆப் ரிலேட்டிவிட்டி ஐன்ஸ்டீன் கோட்பாடு பிரபலமாக இருந்த கால கட்டம் என்பதால் அதையும் கூட இந்த சித்திரம் செப்புகின்றது.

4 கடிகாரங்களில் ஒன்று முழுதாக தெரிகிறது. அந்த முதலாவது சிகப்பு கடிகாரத்தையும் எறும்புகள் மொய்க்கின்றன. எந் நேரமுமும்
சுறு சுறுப்பாக ஓடும் எறும்புகள் நேரத்தை தடுத்து நிறுத்திட இயலுமா?

நேரத்தை எதை வைத்து அளவீடு செய்கிறோம் ? எல்லாம் மாயை கற்பனை சரியான நேரம் என்ற ஒன்று உண்டா?

மற்ற 3 கடிகாரங்களும் சாக்லேட்டுகளை போல உருகி கிடக்கின்றன. பாலை வனத்தில் எல்லாம் உருகி உருக்குலைந்து போய் விட்டனவா?

ஒன்று வெட்டுப்பட்ட காய்ந்த மரத்தின் கிளையில் துணி காய்வது போல கிடக்கு.

இன்னொன்று தூங்கும் டாலியின் மேல் உருகிக் கிடக்கிறது.
அவர் கனவில் இருக்கிறார். கனவில் காணும் காட்சிகளுக்கு ஏது காலம்? விழித்துப் பார்த்தால் இது வேறு உலகம் வேறு காலம்.

அந்த கால கட்டத்தில் கை கடிகாரம் என்பதை காந்தி இடுப்பில் இணைத்திருந்த கடிகாரத்தோடு ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்.

கை கடிகாரம் என்பதே எளியவனுக்கு எட்டாக் கனி. பணம் படைத்தவர்களின் அந்தஸ்து சின்னமாக இருந்திருக்கிறது என்பதையும் இந்த ஓவியம் பேசு கிறது.


"#டாலியின்_உருகும்_கடிகாரங்கள்"

Tuesday, July 29, 2014

இந்திய ஓவியர்களின் ஓவியங்கள்

இந்த பதிவில் நான் ரசித்த இந்தியர்களின் ஓவியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் ரசனையோடு இருக்கின்றன. நவீன ஓவிய கைவண்ணம் இந்த ஓவியங்களில் புதினமாக மிளிர்கிறது.






மேல் ஓவியங்கள் :  திலிப் செளத்ரி


ஓவியம்  : புவா ஷெதே





ஓவியம் : அமோல் பவார்

ஓவியம் : தினகர் ஜாதவ்



ஓவியம் : கணேஷ் பான்டா


ஓவியம் :கோபால் செளத்ரி

ஓவியம் : ஜெகநாத் பால்



ஓவியம் : ஜிபான் பிஸ்வாஷ்

Saturday, June 28, 2014

ரஷ்ய ஓவியர் விளாடிமிர் குஷெவ்

ரஷ்ய ஓவியர் விளாடிமிர் குஷெவ் 1957 ல் பிறந்தவர். ரஷ்யன் ஓவியர்களின் கூட்டமைப்பில்  இவர் ஒரு உறுப்பினர்.

1996 முதல் இவரது ஓவியங்கள் கண்காட்சியில்  வைத்து வருகிறார்.

இவரது ஓவியங்கள் உலக அளவில் (ரஷ்யா பிரான்ஸ், பிரிட்டன், யுனைட்டேட் ஸ்டேட்ஸ்) பல்வேறு ஓவிய கண்காட்சிகளில் காட்சிப் படுத்தப்பட்டு விற்பனையாகி உள்ளன.



































Thursday, May 15, 2014

மனதைக் கவரும் விளாடிமிர் ஓவியங்கள்

விளாடிமிர் வோல்கா ,ரஷ்யாவில் பிறந்தவர்.  இளம் பிராயத்தில் இருந்தே ( 3 வயசு) வரைந்து கொண்டிருக்கிறார்.   சோவியத் யூனியனின் பாலிகிராபிக் இன்ஸ்டிடியூட்டில் தமது படிப்பை தொடர்ந்தார்.  உலக அளவில் பல ஓவியப் போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள் வாங்கி குவித்திருக்கிறார். போஸ்டர் ஆர்ட் எனும் ஓவிய வகைப் பட்டியலில் இவர் கைதேர்ந்தவர்.   ஓவியங்களை பாலட் நைப் மற்றும் தூரிகை கொண்டு தீட்டுகிறார்.  "பாலட் நைப் உபயோகிப்பவர்கள் தூரிகை உபயோகத்தை குறைத்துக் கொண்டிருப்பர்.  1988 ல் இருந்து கமர்சியல் ஆர்டிஸ்டாக பரிமளிக்கின்றார்.  இவரது பல ஓவியங்களும் சி.டி மற்றும் புத்தகங்கள் மற்றும் கேலண்டர் போன்றவற்றில் பிரிண்ட் வடிவில் கண்ணைக் கவர்கின்றன.

1990 களீல் இவர் ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் போது ரோட்டோரமாக பல ஓவியங்களை வரைந்து அப்படி விற்று சென்று இருக்கிறார்.

அமெரிக்க பிரபல பப்ளிகேசன்களுக்கு   ஓவிய பங்களிப்பு தொடர்கிறது.
இயற்கையோடு இயைந்த உருவ ஓவியங்கள் மனதை கவர்கின்றன.

ஒவ்வொரு ஓவியங்களிலும் ஒளி அமைப்பு பின்புலம் பளிச்சென நம் மனதில் பதிகின்றன.

















                                                               "ஓவியர் விளாடிமிர்"


Popular Posts